ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….?
சாட்டை!
எப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது.
இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்!
முரண்பாடு என்ன தெரியுமா?
பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை.
ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி
நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.
நமக்கு வேறொரு சந்தேகம்:
சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர்.
அவர் இப்போது புழல் சிறையில்…
கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…
ஏன் இந்தப் பாரபட்சம்?
ஜூன் 21, 2008 at 8:51 முப
ஆட்டோ சங்கரை அம்பானி, மேத்தாக்களோடு ஒப்பிடுவது தவறான பார்வையைக் காட்டுகிறது..சங்கர் விலைபொருள்..அம்பானிக்கள் விலைவிப்பவர்கள்…
ஜூன் 21, 2008 at 9:00 முப
ரஜீனி போன்ற சுயநலம் கொண்ட மசாலா மன்னர்களைப் பற்றி பாடம் நடத்தி அடுத்த தலைமுறையை நாசமாக்கும் திட்டம் இது. தன்னை உயர்த்திய சமுதயாத்திற்கு இவர் உருப்படியாக என்ன செய்தார்? தானும் தன் குடும்பமும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் இவரைப்பற்றியா பாடம்? போதாதைக்கு அரசாங்கத்தை ஏமாற்றிய வழக்கு வேறு.
இது அடுத்த தலைமுறைக்கு சுயநலகுணத்தை வளர்க்காதா? கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி, தன்னைச்சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்றிய பெரியவர்கள் நாட்டில் வேறு எவரும் இல்லையா? என்ன கொடுமை சரவணா இது?
ஜூன் 22, 2008 at 2:54 பிப
ரஜினி சமுதாயதிற்கு என்ன செய்தார்? சினிமாவில் நடித்தார்.
நிறைய பணம் சேர்தார். ஒருவேளை பணம் இருப்பவைகளை எல்லாம் பாடத்திட்டதில் கொண்டு வருவார்கள் போல.
வாழ்க நமது கல்வித்திட்டம்
ஜூன் 26, 2008 at 2:04 பிப
//கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…
//
இந்த செய்தி புதுசா இருக்கே…எங்க படிக்கலாம்? ஆதாரம் இருந்தா நல்லா இருக்கும்.