சாட்டை


உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

gnani

 

 

 

 

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்காரன்.

ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.

இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.

இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.

காலம் கடந்த போதனை.

சரி, அது போய் தொலையட்டும்;

பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில்“இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?

பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!

ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே.

அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!

என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!

சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ… ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

 

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

cna

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே…?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது.

கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

karuna fast

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்).

அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

suruli

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்… போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும்.

கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார். ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்… நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம்.

சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே…

offer1

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு.பெரிய தில்லாலங்கிடி!

அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும்.

இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது.

அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம்.

‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள்.

சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை.

தேவை ஒரேயொரு கணினி.

‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’…

அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும்.

‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன… அடையாறு பார்க் என்ன… என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

vadivelu-winner

  கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு… ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள.

secretary-general-ban-ki-moon

அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே… அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே…. ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு!துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே…

ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்… இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே!

gandi

ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை.

சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது… போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது.

போராளிகளுக்கு சரிப்படாது.

 

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

sonikaruna

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

மனோகரா’ கதை இது.

ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை.

அப்பன் புருசோத்தமன் என்ன… மகன் மனோகரனே மாட்டிக்கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது.

 விடுவாரா புருசோத்தமன்!

ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு.

புகுந்து விளையாடிவிட்டார்.

 ‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

 ‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

the demon

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை.

புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

 தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான்.

தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

INDIA/

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது.

அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது :

‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?  tds10

‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம்.

சமஸ்கிருதத்தில் சப் – டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து நல்லா கல்லா கட்டியிருக்கலாம்.

 ‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?

naankadavulstills002776fq7

சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம்.

அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.

‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம்.

அவரும் நாத்திகராகி விடவில்லை. ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது.

பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் – பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.

 

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா – இழிவுபடுத்துகிறாரா?

naan-kadavul

 

சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்?

அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.

நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?

naan_kadavul

அறிய மாட்டான்.

மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான்.

ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் மூடி மறைப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.

முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்!

அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.

காங்கிரஸ் போனால் பா.ச.க. வந்து விடும் என்று மார்க்சிஸ்டுகள் சொல்கிறார்களே…

சாட்டை

இந்தப் பூச்சாண்டிக்குப் பதில் மார்க்சிஸ்டுகள் பின்லேடனைக் காட்டி புஷ்சை ஆதரிக்க வைக்கலாம். அந்தக் கேப்மாறித் தனத்திற்கு இந்த மொள்ளமாறித்தனம் எவ்வளவோ மேல்.

 

 

தேவையில்லாமல் எதுக்குப் பத்து அவதாரங்கள்?

 

 

து, சிவாஜியின் ஒன்பது அவதாரங்களை மிஞ்ச வேண்டும் என்ற சொந்த அரிப்பால் வந்த வினை.

 

கவியரசுகண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசுபட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது.

 

அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல்.

அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படிக் கப்பலேறியிருக்காது.

 

கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

 

 

பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!

இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு.

 

கிருமியைக் கொல்ல.

இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு.

 

உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம்.

 

இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது.

உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே!

 

மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே!

 

பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலை ஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!

 

அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்?

 

பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்?

சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.

 

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?

 

 

நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்என பதில் சொல்லும் ஜென்மம் எது?

 

கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை;

 

இடைப்பட்ட ஏதோவொண்ணு.

 

இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு இருக்கு’, ‘இல்லைஎன்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே.

 

கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால்… சந்தேகமே வேணாம்… கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.

புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.

 

 

 

கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?

 

 

ந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் நூல்அரசியல் புலப்படும்.

ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பார்ப்பனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ஐயோ பாவம் பொழச்சுப் போறான்என கொடுத்தால் எண் சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.

 தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி எய்ம்ஸ்வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.

தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்கள் சில சங்கடங்களைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறாரே ப. சிதம்பரம்…

சாட்டை

 

காங்கிரஸ்காரனாக இருந்து கொண்டே அக்கட்சியைக் கல்லறைக்கு அனுப்பும் தனது சதித்திட்டத்தை பச்சையாக எப்படிச் சொல்வார்? அதுதான் தேசநலன்அது, இது என்று சுற்றி வளைத்து பூடகமாகச் சொல்கிறார் ப.சி.

 

காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய முதல் வேலைஎனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். தன் காலத்தில் தமிழ் நாட்டுக்குள் அதைச் சாதிக்கவும் செய்தார்.

 

தொடர்ந்து அகில இந்திய அளவில் ஒழிப்பு வேலை செய்து  அதை பாடையில் தூக்கி வைக்க வேண்டிய வீரமணி, கலைஞர் வகையறாக்கள் அக்கட்சியைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்றார்கள்.

 

 

இந்தக் கொடுமையை காணச் சகியா சிதம்பரம் பெரியார் பணி முடிப்பது ஒரு தமிழன் என்ற முறையில் தன் தோள்மேல் விழுந்த கடமையென கிளம்பியிருக்கிறார்.

 

பெரியார் தொண்டராக இல்லாவிட்டால் என்ன? கதர் சட்டை அணிந்த ஒரு கறுப்புச் சட்டையாக அவரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை.

 

 

சொத்தை அடமானம் வைத்தால்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலைக்கு  நம்மை கொண்டு போனாலும் அவர் நம்மாளுதான்… நாம அவர் பக்கம்தான்.

தேச நலனுக்காக இந்தச் சங்கடத்தை தாங்கிக் கொள்வோம்.

 

உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் இடித்து நொறுக்கப்பட்டு விட்டதே….

சாட்டை

 

நம்பவே முடியலீங்க.

 

சாதியைக் கட்டிக்காத்த ஒரு சுவர் நாம் வாழும் காலத்தில், அதுவும் நம் கண் முன்பே இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட காட்சியையா?”

 

சேச்சே…

 

ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாமல் கடைசி வரை கலைஞர் உறுதியாய்நின்றதைச் சொல்கிறீர்களா?”

 

அதுவும் இல்லையப்பா…

 

அப்படியானால் வேறு என்ன?”

 

திருவரங்கம் கருவறையிலும், சிதம்பரம் நடராசன் சன்னதியிலும் பார்வையாளர்களாக நின்று தீட்சிதர்களோடு சமூக நல்லிணக்கம்காத்த சி.பி.எம்., உத்தப்புரத்தில்  திடீர் பிள்ளையார்போல் திடீர் சாதி எதிர்ப்புப் போராளியாக அவதாரமெடுத்த அதிசயத்தை சத்தியமாக நம்பவே முடியவில்லை.

(படமே ஒரு கேள்விதான்)

சாட்டை

 

 

ப்ளீஸ் மேடம்! காலை கொஞ்சம் சரியா போட்டுக்கங்க… நீங்க நெனக்கிற மாதிரி தொழிலதிபருங்க யாரும் முன்னால இல்ல, எல்லாரும் உங்க பின்னாலதான் உட்கார்ந்திருக்காங்க…

 

கருணாநிதியின் ராமர் விமர்சனத்தினால்தான் குஜராத், கர்நாடக மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெற்றது என்று அய்யா நெடுமாறன் கூறுகிறாரே….

சாட்டை

அய்யா கொஞ்சம் வெவரமானவருங்கோ!

வழக்கமாக வாக்குப் பதிவுக்கு முன் பலரும் கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. முடிந்தவுடன் சிலர் கணிப்பு நடத்துவார்கள்.

 

அய்யா அவர்களோ தேர்தல் நடந்து, பதவியேற்பும் முடிந்தபின் கணிப்பை நடத்தியிருக்கிறார்.

என்னவொரு வசதி பாருங்க!

 

சொன்னது என்ன? நடந்தது என்ன?’ என்று யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியாது. தன் சொந்த ஆசைகளை மக்களின் விருப்பமாக வேறு சொல்லி வைக்கலாம்.

 

அய்யய்யோ… பழையபடி பி.ஜே.பி. வந்துடும்போல் இருக்கே…என்றபடி கவலை ரேகைகளை முகத்தில் தேக்கலாம். உள்ளுக்குள்ளோ அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கலாம்.

 

ஆனா ஒண்ணு, கணிப்பு அண்ட் காமெடி கோஷ்டிகளான சுப்ரமணியம் சாமி, ‘லயோலாபாதிரி ராஜநாயகம் மாதிரி ஆளுங்க பொழப்புல கொஞ்சம் மண் விழும்.

 

தொழில் போட்டியில அவுங்களோட தகராறு வரலாம். அய்யா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் தப்பில்லை என்று விஜயகாந்த் சொல்கிறாரே…?

சாட்டை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உளறி விட்டார்என்று சொல்ல வழியில்லை.

பேசியிருப்பது பகல் நேரத்தில் என்பதால்.

 

ஒருவேளை புலிகளுக்கு ஆதரவாகக்கூட கேப்டன் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்.

 

கார்கில் போரில் கைலாயம் போன இராணுவத்துக்குச் சவப்பெட்டி வாங்குனதுக்கே கமிஷன் அடிச்ச பெருச்சாளிங்க நம்மாளுங்க…!

 

ஆயுத பேரத்துல கை சும்மாவா இருந்திருக்கும்?

அதை எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போறதைவிட சிவகாசியிலிருந்து லெட்சுமி வெடி, தௌசன்ட் வாலா வாங்கி, வன்னிக் காட்டுக்குப் போவதே புத்திசாலித்தனம். பாதுகாப்பும் கூட.

இப்போது புரிகிறதா?

 

சிங்களனை உதை வாங்க வைக்கவே ஆயுதம் கொடுக்கச் சொல்கிறார் நம்ம கேப்டன். இந்தப் போர் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் குடிகாரன்’, ‘உளறுவாயன்என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது.

 

ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….?

சாட்டை!

 

எப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது.

 

இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்!

 

முரண்பாடு என்ன தெரியுமா?

 

பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை.

 

ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி

நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.

 

நமக்கு வேறொரு சந்தேகம்:

சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர்.

 

அவர் இப்போது புழல் சிறையில்…

கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…

 

ஏன் இந்தப் பாரபட்சம்?

 

 

 

 

 

 

அடுத்த பக்கம் »