கட்டுரைகள்


‘‘சமூக விழிப்புணர்வு’ இதழில் தீசுமாசு டி செல்வா எழுதி வெளிவந்த கட்டுரைகள், அதன் எதிர்வினைகள் (நாகரீகம் கருதி பிரசுரிக்க தகுந்தவை மட்டும்) தொகுக்கப்பட்டு ‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’ எனும் தலைப்பில் இப்போது புத்தகமாக ……
வெளியீடு
சமூக விழிப்புணர்வு பதிப்பகம்
68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை & 600 018.
தொலைபேசி
94885 76166
விலை : 45/–


image0041

‘அன்னை’க்குப் பாடம் புகட்ட ‘அம்மா’வுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்களே…. 

தேர்தல் முடிஞ்ச பிறகு ‘அம்மா’ நடத்தப் போகும் பாடத்தை கைகட்டி, வாய் பொத்திக் கேட்கச் செவியுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள் தாராளமாக அம்மாவுக்கு ஓட்டுப் போடலாம்.

பழசை மறந்தவர்கள் பாடம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள தா. பாண்டியன், வரதராஜன் போன்ற காம்ரேடுகளை அணுக வேண்டும். தற்சமயம் சீட்டுக்காகப் போயஸ் கார்டன் வாசலில் ராப்பகலாய் அவர்கள் படுத்துக் கிடப்பதால் கட்சி அலுவலகத்தில் சந்திக்க இயலாது. ஒரு வாரமோ – பத்து நாளோ பொறுத்தபின் முயற்சிக்கவும்.

காங்கிரஸ் கூட்டணிக்குப் போன திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பேசுவார்?

இலங்கையின் இறையாண்மை குறித்து கண்ணீர் விடும் இந்தியா, சீனாவின் இறையாண்மை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதற்காக தலாய் லாமாவுக்கு தினமும் கிடா வெட்டு விருந்து வைப்பதை ஆதாரங்களுடன் மேடைதோறும் அம்பலப்படுத்துவார்.

அய்ரோப்பிய ஓடுகாலி என்.ஆர்.ஐ.களின் மயிரைப் பிடுங்குற டர்பன் மேட்டருக்காக, எந்திரிக்க முடியாத நிலையிலும் சர்கோசியைப் பார்த்து பிராது கொடுத்த மன்மோகனை சந்திக்கிழுத்து வசை பாடுவார்.

காங்கிரசுக்காரன் கடுப்பாகி, கட்டையைத் தூக்கிக் குறுக்கே போட்டால் அப்படியே குப்புறப்படுத்துக் கொள்வார். சிறுத்தை பயந்து புதருக்குள்ளே ஓடி பதுங்கி விட்டது என நாம் அவதூறு சொல்லக்கூடாது. 67 இல் காமராசர் சொன்ன ‘படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ திட்டமாகவும்  இருக்கக்கூடும்.

 

‘சேலை கட்டிய முசோலினி சோனியா’ என்பது இறையாண்மைக்கு எப்படி எதிராகும்?

கற்பு, ஒழுக்கம் இவைகளை பெண்களின் சேலைக்குள் ஒளித்து வைத்திருப்பதுதான் நம்ம ‘கலாச்சாரமே!’ தேசத்தை ஒரு பெண்ணாக உருவகிப்பதால் இறையாண்மையும் அங்குதான் இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கையால்தான் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பாரத மாதாவைத் தேடினார் நம் தமிழினத் தலைவர் ஒருவர்.

இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்களில் ஒருவர் ஒரு காலத்தில்  அத்தலைவரின் சீடகோடியாக இருந்தவரல்லவா! சகவாச தோஷத்தால் இந்திய இறையாண்மையை சோனியாவின் சேலைக்குள் தேடிவிட்டார்கள்…

கறுப்பைக் கரைத்து காவியாக்கினார் அம்மா. கதராக்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

“கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும்” என ரெட்டைக்குழல் துப்பாக்கியாய் முழங்கிய தங்கபாலுவும், ஜெயலலிதாவும் ஏன் வேறு வேறு கூட்டணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்?

இந்துத்துவா, மதமாற்றத் தடைச்சட்டம், பார்ப்பனியத் திமிர் அனைத்திலும் ஒத்த கருத்தும், ஒரே செயல்பாடும் கொண்ட சங்கராச்சாரி ஜெயேந்திரனும், ஜெயலலிதாவும் எதிரெதிர் முகாம்களில்தானே உள்ளனர்!

அஜெண்டாவில் என்ன பின்னடைவு ஏற்பட்டு விட்டது?

எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு – இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல். 

தேர்தல் நம்ம உள்ளூர் பிரச்சனை. அதைக் கணக்கில் கொண்டால் இலவச கலர் டி.வியும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் கொடுத்த கலைஞருக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது?

தாராளமாகப் போடலாம்.

எண்சாண் உடம்புக்கும் பிரதானம் சிரசு அல்ல; வயிறுதான் என்பதை ஒத்துக்கொண்டால்!

செருப்பாலடிச்சாலும் வாய்க்கு ருசியா கறியும் சோறும் ஆக்கிப் போட்டாரே ஆண்டை…!  அடிமையா தொடர்வதில் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பும் பண்ணையடிமைகளின் விசுவாசத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிறுத்துப் பார்க்கக் கொடுக்கப்படும்  வாய்ப்புதான் தேர்தலென்றால் இது மிகச் சரியே!

கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி வைத்திருக்கிறாராமே விஜயகாந்த்?

kaptanu

கடவுளோடு கூட்டணி வைக்க சிதம்பரம் நடராசன் கோயிலுக்குப் போயிருந்தால் நேரடியாக கடவுளுக்கும் – கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடிச்சுக் கொடுத்திருப்பார்கள் தீட்சிதர்கள். டெல்லிக்குப்போய் காங்கிரசுக்காரன் காலில் ஏன் விழுந்து எழுந்தார்? 

சிதம்பரம் போனால் தட்சணை கொடுக்கணும், டெல்லியில் வாங்கலாம் என்பதால் இருக்குமோ!

தமிழீழ ஆதரவாளர்களை கள்ளத் தோணியில் போய் போர் செய்யச்  சொல்கிறாரே முதல்வர்?

இவர் பேச்சை நம்பி கள்ளத் தோணியில் ஏறி படையெடுத்துப் போய் பாளையம் இறங்கும் நம்ம ஆட்கள் அங்கே ராஜபக்சேவின் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்டால் பிரச்சனையில்லை. ‘அன்னை’ திருட்டுத்தனமாக அனுப்பி வைத்திருக்கும் இந்தியக் கூலிப் படையோடு மோத நேர்ந்தால்…!

சகோதர யுத்தம் அல்லது பங்காளி யுத்தம் வந்து விடுமே! தமிழினத் தலைவருக்கு அது அலர்ஜி ஆச்சுதே!

 

கூட்டணியில் வைகோவுக்கு மட்டும் ஏனிந்த இழுத்தடிப்பு?

எடுக்கிறது பிச்சை; அதுல மொறப்பென்ன வேண்டிக்கிடக்கு?

“கடைசியா வந்தவனுக்கெல்லாம் சுடுசோறு; எங்களுக்கு வெறும் பழையதுதானா?” ன்னு அழுது அடம்பிடிக்காம நல்ல பிள்ளையா அம்மா போடுறத வாங்கிக்கணும். புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா… சீர்செனத்திய வாங்கிட்டு நடையைக் கட்டுனோமான்னு இருக்கணும், நம்ம ராமதாசு அய்யா மாதிரி. அத வுட்டுப்புட்டு போன தீவாளிக்குச் சீராட வந்த மருமக புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?

.
பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியது எதற்காக?

சத்தியமா ஈழத் தமிழர் பிரச்சனைக்காகத்தான்.

தட்டிக் கேட்காத மன்மோகன், தட்டிக் கொடுக்கும் பிரணாப், கள்ளத்தனமாக வழிநடத்தும் சோனியா, வாய்க்கொழுப்பெடுத்து திரியும் இளங்கோவன், சிதம்பரம்… கும்பலை எதிர்த்து அல்ல; பதவியைப் பறித்துவிடக்கூடாதென நாற்காலிக்குப் பின்னே பம்மிக் கொண்டிருக்கிறாரே… கருணாநிதி! அவரை எதிர்த்துதான் அணி மாறியிருக்கிறது பா.ம.க.

அதாவது,

புருசன் அடிச்சது தப்பில்லை; கொழுந்தன் சிரிச்சதுதான் பிரச்சனையாம்! ஈழப் பிரச்சனையில் அய்யா எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் லட்சணம் இப்படித்தான்.

எல்லோரும் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கும் பந்தயத்தில் கருணாநிதியை மட்டும் ஜட்டி போட்டுக்கொண்டு ஓடச் சொல்கிறார் தமிழ் குடிதாங்கி மருத்துவரய்யா.

தமிழ்ப் புத்தாண்டுக்குள் ஈழத் தமிழர்களின் கதையை முடித்துவிட ‘அன்னை’ உத்தரவிட்டிருக்கிறாராமே…?

‘மந்திரி குமாரி’ என்றொரு படம்.

கட்டிய மனையாளை மலையுச்சியில் தள்ளிக் கொலை செய்ய ‘வாராய் நீ வாராய்’ என பாடியபடியே கூட்டிச் செல்வான் கணவன் என்ற உறவு கொண்ட காதகன் ஒருவன். எதிர்பாராத திருப்பம் அங்கே. கொலைகாரனே கொலையாகிப் போவான்.

பதவிக்காலம் முழுக்க கடிதங்கள் வரைந்தே பிரச்சனைகளை தீர்த்துக் கட்டும் கலைஞர் இந்த  விசயத்தில் மட்டும் தனது வழியை மாற்றி, ஒரு காலத்தில் தான் வசனம் எழுதிய  மந்திரி குமாரி படப்பெட்டியை பார்சல் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம்.

வேடிக்கைக்காகச் சொல்லவில்லை.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை திசை திருப்பியதாம் அரிச்சந்திரா நாடகம்.

சோனியா காந்தியின் பாதையை ஏன் மாற்றாது மந்திரி குமாரி?

 

“போர் என்றால் அப்பாவி மக்கள் மேலும் குண்டுகள் விழத்தான் செய்யும்” என ராஜபக்சேவின் கொலைவெறிக்குப் பரணி பாடிய ‘அம்மா’ இன்று ஈழ ஆதரவுப் படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றிருப்பது காலம் செய்த கோலமா?

ஈராக்கிலும், ஆப்கானிலும் மிகப்பெரும் மனித உரிமை மீறலை நிகழ்த்தும் அமெரிக்கச் சண்டியரை ஈழப் பிரச்சனைக்குப் பஞ்சாயத்து பண்ண வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறவர்கள் ‘அம்மா’ தலைமையின் கீழ் அணி திரள்வதில் கேவலம் ஒன்றுமில்லை.

அதே வேளையில் ‘ஒரு மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்’ என ஒற்றை வரியில் ஐந்தாயிரம் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தி திமிர் கக்கிய ஒருவரின் கோரச் சாவுக்காக ஒரு இனத்தையே காவு வாங்கத் துடிக்கும் போக்கிரிக் கும்பலுக்கும், இந்தத் தள்ளாத வயதிலும் அவர்களைத் தோள்மேல் தூக்கிச் சுமப்பவருக்கும், ‘அம்மா’ ஏற்று நடிக்கும் புதிய பாத்திரத்தை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை.

.
‘காங்கிரசைத் தோற்கடிப்போம்’ வசனம் ‘ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவோம்’ என்பதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறது?

மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அதைச் சொல்கிறது.

எதிரிகளும், துரோகிகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக, ஒரே அணியில் கலந்து விட்டதால் இப்படிதான் சொல்ல முடியும்.

ஏனெனில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் பிள்ளையானும், கருணாவும்.

துரோகிகளாக இருந்தாலும் ‘நம்மாளு’ எனும் இன உணர்வுடன் நெருங்கலாம் என்றால் அங்கே ஒரு ராஜபக்சேவும் இருக்கிறார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று சிக்கித் தவிப்பவர்கள் ஈழ மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களும்தான்.

‘விடுதலையை வென்றெடுக்க’ தொடர்ந்து ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டும், ஓட்டுச் சீட்டையே ஆகச் சிறந்த ஆயுதமாகவும் முன்மொழிபவர்களுக்கு இந்தச் சிக்கல்  கண்டிப்பாக வந்தே தீரும்.

ஜெயமோகன் & பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை

tds_8

ளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.

வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்பதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே… ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.

naan-kadavul4-500x375

சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:

‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.

‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.

வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?

ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம்.

கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே… அவன்!

அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா?

நிச்சயம் வருவான்.

அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.

naan-kadavul-stills-012

ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் – சுஜாதா கூட்டணியிடமிருந்து உருவவில்லை.

அந்நியனுக்கு கருட புராணம்.

கடவுளுக்கு ஏழாவது உலகம்.

முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய…’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு?

நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க விட்டிருப்பவனுக்கு…?

1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே… யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன்.

அவனுக்கு என்ன தண்டனை?

போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டுக்குத் திரும்பி விடும் தூரம்தான்.

‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்… என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது!

agori

அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!

அவன் மட்டுமா…

நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்!

டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி…! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்…

ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி – அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்!

அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காத்தி தேசத்துப் புத்திரர்கள். அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் – அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்!

‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

 

‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள்.

அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் – ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்… நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்கும்.

ன்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு. –

‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’.

உண்மைதானா இது?

ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி – செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?

வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ…’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே… நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்…

பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே…

பிச்சைக்காரர்கள்!

‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!

கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் தலையில் ‘ணங்’ என ஓர் அடி அடிக்கும்.

ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.

உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா – ஜெ.மோ கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.

 

naan-kadavul-stills-030

இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்திற்கு கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.

பாலா – ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.

பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும்.

கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?

41

கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (என்ன எளவோ) செய்பவர்களாக… புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக…

பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக…

அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.

இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?

நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும்தான் அறியப்பட வேண்டும்.

சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?

திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார்.

“ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.

 

 

தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி.

எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார்.

எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?

வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார்.

 

naan_kadavul_movie_photos_28

படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

 

இப்போது சொல்லுங்கள்… இவர்களில் யார் உண்மையான படைப்பாளி?

 

tds_bala1

‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.

சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம்.

வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்? 

திஸ்மாஸ் டி செல்வா  

   

  

hand.jpg

 

ரொம்ப நாளைக்கப்புறம் அவனைப் பார்த்தேன்.

ஜனநாயகத் தூண்களை அசைத்துப் பார்க்காதே

பத்திரிகைச் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மு.க. அழகிரியை அரசே உடனே கைது செ

ஒருவர் மைக்கில் ஓங்கிக் குரல் கொடுக்க நம்மாளு பதிலுக்கு கைது செய் என்று முஷ்டியை மடக்கி, பின்பு உயர்த்தி கத்திக் கொண்டிருந்தான்.

மைக்கைப் பிடித்திருந்தவர் கலாநிதி மாறனும் இல்லை; இவன் தினகரன் ஊழியனுமில்லை.

 வேற யாரு?

யாரு, நம்ம சி.பி.எம்.முங்கதான்.

 ரெண்டுல ஒண்ணு பாக்காம விடப் போறதில்லை என முண்டா தட்டுன மொதலாளியோ, அழகிரிக்கு எதிராக ஆதரவு திரட்ட ஜெர்மனிக்குப் போயிட்டாரு.

குட்டி மொதலாளி ஊட்டியில.

 பத்திரிகை வந்தா அடியாளுங்க அடிக்கிறானுங்க; வரலேன்னா மொதலாளி வயித்துல அடிப்பான்

கடமையுணர்ச்சியோட தினகரன் ஊழியருங்க பத்திரிகை காம்பவுண்டுக்குள்ள…

கோர்ப்பச்சேவுக்கு காய்ச்சல் வந்தா இங்கே போத்திப் படுத்துக் கொள்பவர்கள் உள்ளூரில், அதுவும் தன் கண் எதிரில் நடக்கும் அநீதி கண்டு சும்மா இருக்க முடியுமா?

நம்மாளு இருக்கானே… கைதட்டிக் கூப்பிட்டாலே வந்து விடுவான்தான். பாவம், அவ்வளவு கஷ்டப்பட்டுச் சேத்தக் கூட்டத்துல பாதி காணாமப் போன மாதிரியாயிடுமேன்னு கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன்

.மைக்கை பைக்குள் போட்டு, கொடியைச் சுருட்டி அக்குளில் இடுக்கியபடி போராளிகள்புறப்படத் தயாரானபோது பின்னால் போய் அவன் தோளைத் தட்டினேன்.

அடியாட்கள்தான் பழையபடி வந்துவிட்டார்களோ என திடுக்கிட்டபடி ஓரடி முன்னால் நகர்ந்தவன் எப்படியோ கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.

 குலுக்கிய உண்டியலில் ஐநூறு ரூபா விழுந்ததை கண்டவன்போல என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு.

டீயெல்லாம் குடித்து ஆசுவாசப்படுத்திய பின்னும் அழகிரிக்கு எதிரான ஆவேசம் கொஞ்சம் கூட தணியாமல் இருந்தான் நம்ம காம்ரேடு
.
சும்மா சொல்லக்கூடாது. வழக்கமா நீங்க தொழிலாளிகளுக்காக போராடறதை விட மொதலாளிமாருங்களுக்காக நீங்க களம் இறங்குறப்போ காட்டுற உணர்ச்சியும், வேகமும் கொஞ்சம் கூடுதல்தானப்பா.

காம்ரேடின் தோள் தட்டி பாராட்டினேன்

. இதப் பாரு… நாங்க எத செஞ்சாலும் நொள்ள சொல்றதே உனக்கு வேலையா போச்சு. இப்ப நாங்க போராடினது மொதலாளிக்கில்ல. அநியாயமா உசுர விட்ட மூணு தொழிலாளிகளுக்குத்தான்.

சிக்கல்னு வந்தா தொழிலாளிகளை முன்னால கொண்டு நிறுத்தறுதுதான் இந்த முதலாளிகளோட தந்திரம்னு நேத்தி வரைக்கும் பேசி பொளந்து கட்டுனவங்களாச்சேப்பா நீங்க. இப்ப எப்படி இத முதலாளியோட பிரச்சனை இல்ல என்கிறீங்க?

 இதே தினகரன்ல கடந்த ஒரு வருசத்துல மட்டும் நூத்துக் கணக்கானவங்கள எந்த முன்னறிவிப்பும் இல்லாம நாளையிலேருந்து வேலைக்கு வர வேணாமுன்னு தொரத்தி தெருவுக்கு விட்டானுங்க. அப்ப எங்கப் போச்சு உங்க வர்க்கப் பாசம்?

 கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தீங்களா?”

இது விதண்டாவாதம். பச்சையா அராஜகத்துக்கு துணை போறது. இந்தாளுக்கும், அந்தாளுக்கும் பிரச்சனையின்னா அத அவுங்க குடும்பத்துக்குள்ளதானே பேசித் தீத்துக்கணும். அது விட்டுப்புட்டு சும்மா சம்பளத்துக்கு வேலை பாத்தவனுங்களை கொல்றதை நியாயப்படுத்துறியா?”

 கண்டிப்பா நியாயப்படுத்த முடியாதுதான். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், முதலமைச்சரின் வீட்டிலிருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள்தான்.  

ஆனா, பங்காளிங்க சண்டையில எப்பவுமே பஞ்சாயத்துப் பண்ணப் போறவன் மாட்டி ஒதபடுவது வழக்கம்தானே.

அந்தக் கதைதான் இங்கேயும் நடந்து போச்சு.

சரி, அந்தாளுக்கும், இந்தாளுக்கும் பிரச்சனையின்னு சொன்னியே…எந்த ஆளுக்கும் எந்த ஆளுக்கும், என்ன பிரச்சனை?‘

எதுவுமே தெரியாத மாதிரி என் வாயைக் கிளர்ற? கருணாநிதியோட அரசியல் வாரிசு யாருன்னு தினகரன் பத்திரிகையும், உலகத்துலேயே நம்பர் ஒன் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஏ.சி. நில்சன் நிறுவனமும் சேர்ந்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்துனாங்களாம்…

கொஞ்சம் நிறுத்து… ஏ.சி. நில்சன் நம்பர் ஒன் கருத்துக் கணிப்பு நிறுவனம்னு சொல்றியே. மத்தவங்களுக்கு இது கணிப்பு நடத்துற மாதிரி, இவுங்களுக்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தி இந்த நிறுவனம்தான் நம்பர் ஒன் நிறுவனம்னு அறிவிச்சாங்களா?”

அட என்னப்பா நீ… ஒரு வரி பேசவுடமாட்டேன்கிற? அவுங்க சொல்றத நான் சொல்றேன். கருணாநிதியோட வாரிசுன்னு அவரோட சின்னப்புள்ள ஸ்டாலினுக்கு எழுபது சதவீதமும், பெரியபுள்ள அழகிரிக்கு ரெண்டு சதவீதமுன்னும் கணிப்பு முடிவைப் போட்டதுக்குத்தான் இத்தனை அட்டூழியமும்…

அடேங்கப்பா… சோத்துக்குள்ள பூசணிக்காயை ஒளிச்சு வைக்கிறதுன்னு சொல்றாங்களே, சத்தியமா அது இதுதாண்டா.

ஸ்டாலினுக்கு எழுபது, அழகிரிக்கு ரெண்டு போட்டதுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணமா, இல்ல, ரெண்டு பேருக்கும் இடையில மற்றவர்கள் யாரோ ஒருத்தருக்கு இருபது சதவிகிதம் மட்டும்தான் காரணமா? உண்மையைச் சொல்லு

‘‘ என்னப்பா நீ அவ்ளோ பெரிய கட்சியில சி.எம். பதவிக்கு வேற ஆளா இல்ல? அன்பழகன், மாதிரி எத்தினி பேரு இருக்குறாங்க?’

யாரு அன்பழகனா? அவரு கருணாநிதியை விடவும் வயசானவருப்பா? அவரு வாரிசா?

 மவனே… இது மட்டும் அன்பழகன் காதுல விழுந்துடுச்சுன்னு வையி… இருக்குற சீட்டுல இருந்து என்னைக் கிளப்பி விடுறதுக்கு இப்பிடி எத்தினி பேருடா கிளம்பியிருக்கீங்கன்னு சண்டைக்கு வந்துடப் போறாரு

அப்ப மத்தவங்க யாரு?’

தயாநிதி மாறன்தான்.

ஒரே மாசத்துல எம்.பி.யாகி, கேபினட் மந்திரியானாரு தயாநிதி. ஆனா, அதுக்கப்புறம் மூணு வருசமா எந்த வளர்ச்சியும் இல்ல.

 ஒரு முதல்வர், அதுவுமில்லேனா துணை முதல்வர்… இப்படி எந்த வளர்ச்சியும் இல்லேனா மனுசன் டென்ஷனாக மாட்டாரா?

அதுதான், அந்த டென்சன் பண்ணுன வேலைதான் இந்த கணிப்புச் சமாச்சாரம்.

அவரு டென்சனை விட்டுத்தள்ளு. ஆயிரந்தான் இருந்தாலும் பத்திரிகை நம்ம ஜனநாயகத்தோட தூண்களில் ஒண்ணு. அவுங்க எழுதுறதுல மாறுபட்ட கருத்திருந்தா அத கருத்தால எதிர்க்கிறதுதானே முறை. இப்பிடி அரிவாளைக் தூக்குறது என்ன நியாயம்?”

என்னது ஜனநாயகத் தூணா?”

ஆமா… இந்திய ஜனநாயகத்தைத் தாங்குற நாலு தூண்களில் பத்திரிகைத் துறையும் ஒண்ணுதானே?’

அப்படிப்போடு அரிவாள…

 வடிவேலு காமெடி ஒண்ணு அடிக்கடி டிவியில போடறான்… போய் மொதல்ல அதப்பாரு.  

ஊரிலுள்ள ரவுடிகளையெல்லாம் போலீசுகாரன் புடுச்சுட்டுப் போவான். உடனே வடிவேலுவும் ஓடிப்போய் போலீஸ் வண்டியில ஏறி நானும் ரவுடிதாம்பா… என்னையும் அரஸ்ட் பண்ணி கொண்டு போ… இல்லேன்னா வெளில ரொம்ப அசிங்கமாப் போவும் கெஞ்சுவாரு.

 நீ ரவுடி கிடையாது போலிசு சொன்னாலும் கேக்காம வண்டியில ஏறிப்பாரு.

 இப்ப பத்திரிகைகாரனுங்க தன்னை ஜனநாயகத்தோட ஒரு தூணுன்னு தம்பட்டம் அடிக்கிறதும் அந்த வடிவேலு கதை கணக்காதான் இருக்கு.

 இவங்க ஜனநாயகத்தைத் தாங்குன லட்சணம்தான் எழுபத்தஞ்சுல அன்னை இந்திரா எமர்ஜென்சி பேரில் ஜனநாயகத்துக்கு ஆப்படிச்சப்பவே அம்பலமாயிடுச்சே…

அரசாங்கத்துல காட்டி ஒப்புதல் வாங்கினதுக்குப்புறம்தான் பத்திரிகை அடிச்சு வெளியே அனுப்பனும்னு அன்னை ஆணையிட்டப்ப, கட்டளைக்கு அடிபணிந்தவர்கள்தான் இந்த ஜனநாயகக் காவலனுங்க.

 குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை, ரயில் எரிப்பாகச் சித்தரித்து முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டின பரிவாரங்களுக்குச் சமமான பங்கு பத்திரிகைகளுக்கு உண்டு.

அகில இந்திய பத்திரிகை கவுன்சில் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இருந்தது இவர்களின் நேர்மை.

கரசேவகர்களின் சமையலால்தான் ரயில் எரிந்தது என லாலு பிரசாத் அமைத்த கமிசன் கண்டுபிடித்த உண்மை இவர்கள் முதுகில் ஓங்கி அறைந்தபோது, இவர்களிடமிருந்து வெளிப்பட்டது மவுனம் மட்டுமே.

காந்தியை ஒரு பார்ப்பனர் சுட்டுக் கொன்றபோதும், காமராஜரை டெல்லியில் தீ வைத்துக் கொளுத்திக் கொல்ல முயன்றபோதும் சம்பவங்களை எழுதினார்கள்; சம்பந்தப்பட்டவர்களை மறைத்தார்கள்.

’92 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவாவாதிகளுக்கு ராமஜென்ம பூமி; இவர்களுக்கோ வெறும் சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டுமே.

இன்னும் பொடா, தடா, அவதூறு, உலகமயம், தாராளமயம், தனியார் மயம், கூடங்குளம், கொடியங்குளம் எல்லாத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கு முட்டுக் கொடுக்கிறவர்கள்தான்; அல்லது அதை நியாயப்படுத்துகிறவர்கள்தான் இவர்கள்.

சாதாரண கீரை விற்கிற பொம்பளக் கிட்ட போட்டிக்கு வரும் ரிலையன்சையும், வால்மார்ட்டையும் ஆதரிப்பார்கள். மக்களுக்குத் தரம்தான் ரொம்ப முக்கியம் என வக்காலத்தும் வாங்குவார்கள்.

அதுவே பத்திரிகைத் துறையில் நுழைய முயன்றால் அய்யய்யோ… அந்நிய முதலீடு ஆபத்து என்று டெல்லி சுல்தான்களை நோக்கி காவடி எடுத்து ஓடுவார்கள்.

கள்ளக்காதல், கற்பழிப்பு எல்லாவற்றையும் பக்கத்தில் நின்று விளக்கு புடிச்சவன் மாதிரி விலா வாரியாக இவர்கள் எழுதுவார்கள். இவுங்க எழுதுறது உண்மைன்னா சம்பந்தப்பட்ட வழக்குகளில் இவர்களையும் ஒரு சாட்சியா சேர்த்துக்கணுமே

.மொத்து வாங்குறப்ப பத்திரிகை சுதந்திரத்துக்கே அடி என்பார்கள். பக்கம் பக்கமா ஆபாசத்தை கடைவிரிக்கும்போது நாங்க வியாபாரிங்கதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள்.

நமக்கு அவதூறு, ஆள்தூக்கி சட்டங்கள்; இவுங்களுக்கு சட்ட சபை கூண்டுல ஏத்தி செல்லமா ஒரு கண்டனம்.

சுருக்கமா என்ன சொல்ல வர்றீங்க? நம்மள பின்னி பெடலெடுக்கிற மாதிரி அவுங்களையும் பண்ணனும். அப்படித்தானே…?’

மாப்ள… கடுப்பாகாத… அப்படிச் சொல்ற நிலைமைக்கு எங்கள கொண்டு வந்துடாதீங்கன்னு சொல்றேன்.

சரி, நான் முதல்ல கேட்ட கேள்விக்கு இன்னும் சரியா பதில் சொல்லவேயில்லையே? ஒரு கருத்துக்கு எதிரா வன்முறையில பதில் சொல்றது எப்படி சரி?’

கருத்தை கருத்தால எதிர்கொள்ளணும்கிறது யாருக்குப் பொருந்தும்?

 கருத்து மோதலை நிகழ்த்துகிற இரு தரப்பும் சம வாய்ப்பிலும், வசதியிலும் இருந்தால் மட்டும்தானே?

 நாலு பேரு ஒண்ணா சேர்ந்து காபி குடிக்கப் போனாலே இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டனர் என்று புளுகுகிறவன் பத்திரிகையில், அம்பத்தாறு வருசமா வாய்ப்பு மறுக்கப்பட்டவன் கருத்துக்கு இடம் இருக்கிறதா?

 ஸ்ரீலங்கா அரசின் விருதை கொஞ்சம்கூட கூச்சமின்றி வாங்கிய இந்து ராம்ஈழ விடுதலைக்கு எதிராக எழுதுவதை கருத்து என்று சொல்வதை விட கூலிக்கு மாரடிக்கிறான்னு சொல்வதுதானே சரியாக இருக்கும்..

இப்படிப்பட்ட கருத்துப் புரட்டாளர்களுடன் என்ன கருத்து மோதல் நிகழ்த்த முடியும்?

 அக்ரகாரத்து இந்துஎக்ஸ்பிரஸ் அவுட்லுக் புளுகு மூட்டைகளை விட்டுத் தள்ளு. தினத்தந்தியாவது நியாயமான மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்குமா?’

பத்திரிகைன்னா தினத்தந்தியும், இந்துவும் மட்டும்தானா? தீக்கதிரும், ஜனசக்தியும் பத்திரிகைகளா ஒங்க கண்ணுக்குத் தெரியலையா?’

‘‘யோவ், வாயில அசிங்கமா வந்துட போவுது @ முல்லைப் பெரியாறு பற்றியோ, சேலம் கோட்டம் பற்றியோ, அச்சுதானந்தனின் அவதூறுகளுக்கு பதில் சொல்லியோ ஒரு கட்டுரை எழுதி தர்றேன். அத முழுசா கூட இல்ல, ஒரே ஒரு பத்தி மட்டும் தீக்கதிர்ல போட்டா போதும். போடுவீங்களா?  

அட ஞானசூன்யமே, நேத்திக்கு இதே எடத்துல ஒங்க சி.பி. எம். ஆளுங்க தினகரன் பத்திரிகைகளை வாங்கி நடு ரோட்டு போட்டு போகி மாதிரி கொளுத்தி கோசம் போட்டீங்களே… எதுக்கு?’

அதுவா… ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு நாங்க பக்த்சிங் படத்தைப் போட்டு வெளியிட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தைச் சம்பந்தப்படுத்தி தினகரன் எங்கமேல அவதூறா ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதை கண்டிச்சுதான் அந்தப் போராட்டம்.

‘‘அவதூறான செய்தின்னா அதைக் கண்டிச்சு தீக்கதிர்ல எழுதி தினகரனோடு கருத்துப் போர் நடத்த வேண்டியதுதானே?

நடு ரோட்டுல பத்திரிகைகளை ஏன் தீவச்சு எரிச்சீங்க?

பச்சையா சொன்னா வலுத்தவன் ஆபிசுக்குள்ளார புகுந்து அடிச்சான். அது இல்லாத நீங்க பத்திரிகைகளை எரிச்சீங்க.

 நந்திகிராம சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு டாடா கம்பெனிக்கு இடம் எடுக்காதேன்னு சொன்னா உங்க கொள்கைப்படி அவர்களோடு கருத்துப் போர் நடத்தி அவர்களை வென்றெடுத்திருக்கணும்.

ஆனா, துப்பாக்கியை தூக்குனீங்க.

ஒங்களால கடைப்பிடிக்க முடியாத தத்துவத்தையெல்லாம் ஏன் அடுத்தவன் தலையில கட்டுறீங்க? ”

அப்ப உங்க கருத்தைச் சொல்ல நீங்கதான் பத்திரிகை நடத்தணும்

ரொட்டி வாங்க காசு இல்லேன்னு சொன்னா கேக்கு வாங்கி சாப்பிட சொன்னவன் கதையாயிருக்கு.

 காம்ரேடுங்க நல்லாதான் டெவலப் ஆகியிருக்கிறீங்க.

காலைல பேப்பர் வாங்கவே ஒவ்வொருத்தன் பையையும் தடவி மூணு ரூவா தேட வேண்டியிருக்கு. இந்த லட்சணத்துல என் கருத்தைச் சொல்ல நான் பத்திரிகை நடத்தணுமா?  

அவ்ளோ பெரிய நெட் ஒர்க்குக்கு எதிரா ஐயாயிரம் காப்பி கருத்துப் பரவல் எம்மாத்திரம்?  

கருத்தைப் பரப் புறது.. காலைப் பரப்புறது எல்லாம் இனி வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுதான் ஒங்காளுங்க பேனாவைத் தூக்கி கடாசிட்டு, தீப்பெட்டியைக் கையிலெடுத்து பத்திரிக்கை க்குத் தீவச்சிருக்காங்க…

… நந்திகிராமில் துப்பாக்கிய தூக்கி சுட்டுத் தள்ளுனாங்க.

அப்ப?

நம்ம ஆயுதங்களை நாம் மட்டுமல்ல, எதிரிகளும் சில நேரங்களில் தீர்மானிக்கிறாங்க…. 

தமிழ் படித்த ஓர் ஆசிரியர் வெறும் ரெண்டாயிரம் மட்டுமே சம்பளமாக வாங்க, கம்ப்யூட்டர் படித்து கால்சென்டரில் வேலை பார்ப்பவன் இருபதாயிரம், முப்பதாயிரம் வாங்குவது என்ன நியாயம்?

சாட்டை 

 d_01psd.jpg

நியாயமில்லைதான்.

ஆனால்,

கண்டக்டர் வேலைக்கு லாயக்கில்லையென துரத்தப்பட்டவனுக்கு இருபது கோடி…

காலேஜை கட் அடித்து கஞ்சா குடித்துக் கொண்டிருந்தவன் ஏழு கோடி…

கவரிங் கடையில் உட்கார்ந்து வளையல் போட்டவன் ஒரு கோடி…

வாங்குவது கோடம்பாக்கத்தில்.

கால் சென்டரில் வேலை பார்ப்பவனை காரிலிருந்து இழுத்துப் போட்டு அடிக்கலாமென்றால் (நன்றி : கற்றது தமிழ்) இந்தக் கோடம்பாக்கத்துக் கூத்தாடிகளை வூடு பூந்து உதைத்திருக்க வேண்டுமே?

என்ன செய்வது?

அடுத்தப் படத்திற்கு (அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால்) கதை சொல்ல இயக்குநர் அங்குதானே போய் நிற்க வேண்டும்!

அவருடைய தர்மசங்கடம் நமக்குப் புரிகிறது.

ஆனால், அவருக்குப் புரியாத சேதி ஒன்றுண்டு.

ஆல்பர் காம்யூ, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  படித்தால் தாடி வளர்க்கலாம், மோட்டு வளையைப் பார்த்து போஸ்கொடுக்கலாம். சுற்றி நிற்கும் அள்ளக் கைகளிடமிருந்துஅறிவுஜீவிபட்டம்கூட வாங்கலாம்.

படைப்பாளிஎன்ற பட்டத்தை மட்டும் கடைசிவரை  வாங்க முடியாது மக்களிடமிருந்து.

-சமூக விழிப்புணர்வு

ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் சொல்கிறார்களே…

சாட்டை

 d_04psd.jpg

பரிதாபத்துக்குரியவர்கள் காங்கிரசுக்காரர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவை நம்ம ஆறுதலும், தேறுதலும்தான்.

மொதல்ல ஜெயந்தி மேடத்துக்கு ஆறுதல்!

பாவத்தின் சம்பளம் மரணம்.

சொல்வது பைபிள்.

சோனியா ஒரு கிறிஸ்டியன்.

அதிலும் இத்தாலியிலிருந்து வந்த ட்ரூகிறிஸ்டியன்.

சம்பளத்தோட சேர்த்து போனசும் வந்துடப் போவுதுன்னு அந்தம்மா மறந்திடுச்சு, மன்னிச்சிடுச்சு.

கட்ன சம்சாரமே கமுக்கமா இருக்குறப்போ, இது ஏன் லபோ, திபோன்னு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்குது?”

சத்தியமா நாம கேக்கப் போறதில்ல. ஊரு உலகத்துல உள்ளவங்க கேப்பாங்க.

நரம்பில்லாத நாக்கு, நாலுவிதமாகப் பேசத்தான் செய்யும். அம்மணிதான் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கிக்கணும்.

d_03psd.jpg 

அடுத்து, வாசன் வகையறாக்களுக்கு தேறுதல்.

சத்தியமூர்த்தி பவனிலிருந்து வேட்டி கிழியாம, டங்குவார் அறுந்து தொங்காம எப்படியோ தப்பி வெளியே வந்துவிடும் சாதுரியத்துக்கு மொதல்ல ஒரு சலாம் வாசன்ஜி. 

புலிகளின் படுபாதகச் செயலை மறக்க முடியாம தினமும் நீங்க பாய்ல பொரண்டு பொரண்டு படுக்குறதக் கேட்டா நமக்கும் தூக்கம் வரமாட்டேங்குது.

ரெண்டு கிலோ புளுத்த அரிசிக்காக ராப்பகலா ரேஷன் கடை வாசல்ல படுக்க வச்சி வருசம் நாப்பது ஆச்சு. அத இன்னும் மறக்காம நீங்க இருக்கலாம், நாங்க மட்டும் மறந்துடணுமா?”ன்னு எதிர்கேள்வி போடுறது எங்களுக்குப் புரியாம இல்ல.

எங்க கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.

என்னதான் காங்கிரசுக்காரனா இருந்தாலும் தமிழனாச்சே என்ற பாசத்துல சொல்லி வைக்கிறோம்.

ராஜீவுக்காக புலிகளை மறக்க முடியலைன்னு இங்கே சொல்ற மாதிரி, இந்திரா படுகொலைக்காக சீக்கியர்களை மறக்க முடியாதுன்னு பஞ்சாப்பில போய் சொல்லி வைக்காதீங்க.

தலப்பா கட்டுங்கஅடிக்குற அடியில புத்தூர் கட்டு போடுற மாதிரியாயிடும்.

ஜாக்கிரதை!

-சமூக விழிப்புணர்வு

r_indian_left.jpg

கடவுள் இல்லை என்று சொல்கிறோமே… திடீர்னு கடவுள் வந்துட்டா என்ன அய்யா பண்றது?” 

இருக்கிறாருன்னு சொல்லிட்டுப் போவோம். 

தந்தை பெரியாருக்கும், சாதாரணத் தொண்டர் ஒருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது. 

ஒருவேளை, அந்த அப்பாவித் தொண்டருக்குப் பதில் இன்னொருவர்,

அதாவது கொஞ்சம் வெவரமானவரு…

நாலு உலக விசயம் தெரிஞ்சு வச்சிருக்கிறவரு…

வேற யாரு… நம்ம சி.பி.எம்.முதான்…

அதே கேள்வியைக் கேட்டிருந்தால்?

அதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பெரியார். 

ஆனா, சி.பி.எம்முங்க வெவரமானவங்க மட்டுமில்லையே, கொஞ்சம் வெவகாரமானவங்களுமாச்சே… 

தெருக்கூத்துல சாமி வேசம் கட்டி ஆடுறவன் எவனையாவது பிடிச்சுக் கொண்டாந்து இதோ கடவுள்! இப்ப இருக்கிறாருன்னு சொல்லுஎன்று தர்ணா நடத்தியிருப்பார்கள். 

கற்பனை கொஞ்சம் அதிகம்தான் என்பவர்கள் சேலம் கோட்டப் பிரச்சனை சமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டது என்ற தோழரின் பச்சைக் புளுகை மீண்டுமொருமுறை படித்துக் கொள்ளலாம்.

எப்படித் தீர்த்தார்கள்? 

மதுரை கேட்டத்தில் இருந்த பொள்ளாச்சியையும், கிணத்துக்கடவு உள்பட 79 கி.மீ. பகுதிகளையும் சேட்டன்மார்களுக்குக் கைமாற்றி விட்டு, கோவை, திருப்பூரை மீட்டார்கள்.

 மொழி வழி மாநிலங்கள் போல், மொழி வழி கோட்டம் கேட்டு மட்டுமல்ல, இந்தப் போராட்டம்! கோவை பகுதிகளிலிருந்து பெற்ற வருமானத்தில் பாலக்காட்டின் தொப்பை மட்டும் தனியாக வளர்ந்ததால் வந்த வயிற்றெரிச்சலில் எழுந்ததுதான் சேலம் கோட்டச் சிந்தனை. 

ஆனால், வயித்து வலியை சரிசெய்த மருத்துவன் கிட்னியைத் திருடிக் கொண்ட கதைபோல, கோவையை மீட்க நடந்த போரில் பொள்ளாச்சியைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.

பாலக்காடுடன் இருந்ததால் தமிழர் பகுதிகள் வளர்ச்சியடையாமல் போனது உண்மை. அந்த உண்மை பொள்ளாச்சிக்கும் பொருந்தும்தானே!

கோவை வாழ, பொள்ளாச்சி மட்டும் நாசமாகப் போக வேண்டுமா? 

இது என்ன சுமூகத் தீர்வு?

வெங்காயம்!

சரி,

 உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல் கேட்கிறேன்.

 இதையே ஒரு நல்ல தீர்வாக எடுத்துக் கொண்டால்கூட தமிழக சி.பி.எம். கிளை இதற்காகச் செய்ததென்ன?

பட்டியல் போடுங்கள்.

கிடுகிடு போராட்டம், மறியல்…

 ம்ஹீம்… அதெல்லாம் அசல் மார்க்சிஸ்டுகளுக்கு.

நீங்கள் காந்தியிஸ்டுகள்.

குறைந்தபட்சம், அச்சுதானந்தனின் முகத்திலறைகிற மாதிரி ஏதேனும் அறிக்கை?

சகோதர பாசம் கெட்டுவிடக்கூடாதுஎன்று வேண்டுகோள் விட்டீர்கள்.

அதுவும் அச்சுவுக்கு அல்ல, பாதிக்கப்பட்ட நமக்கு.

இந்த லட்சத்தில் மார்க்சிஸ்டுகள் கேரள நலனைப் பலிகொடுத்து விடுவார்கள்என்று கேரளாவில் இவர்களைப் பார்த்து வசைமாரி பொழிகிறார்களாம்… 

cpi.jpg 

காம்ப்ளிமென்டரி காப்பியாக ஆபீசுக்கு வரும் தேசாபிமானி, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசிஇதழ்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் உளறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

 கேரள மக்களை இவ்வளவு மட்டமாக எடை போடாதீர் தோழரே…

போக்குவரத்தில், வேலைவாய்ப்பில், உணவுத் தேவையில் தமிழகத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும் நாம் இவற்றையெல்லாம் இழப்பாகக் கருதக்கூடாதுஎன்று பல எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அச்சுதானந்தன் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் தமிழர்கள் அல்ல, மலையாளிகள்தான்.

இன்னொரு உண்மை அவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் இல்லை.

ஆபாசத்தைக் கடைவிரிக்கும் சினிமா வியாபாரி மக்களின் ரசனைமேல் பழியைப் போட்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்வதுபோல் இருக்கிறது கேரள சி.பி.எம்.முக்கு நீங்கள் வாங்கும் வக்காலத்து.

கேரள மக்களுக்கு வெறியேற்ற முயற்சிப்பதுதான்  சி.பி.எம்.மின் சமீபகால அரசியலே.  

ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கை மிஞ்சும் அளவுக்கு கிராபிக்சில் கலக்கிய முல்லைப் பெரியாறு அணை உடைப்பு சி.டி. ஒளிபரப்பு மக்களுக்கு சி.பி.எம். நடத்திய சித்தாந்த பாடமில்லை.

பச்சையான இனவெறி அரசியல்.

பாலக்காட்டிலிருக்கும் தண்டவாளங்களையெல்லாம் ராவோடு ராவாக பெயர்த்தெடுத்து, இரயில் பெட்டிகளை லாரியில் ஏற்றி சேலம் கொண்டு போவதுபோல் அடுத்து ஒரு கிராபிக்ஸ் தயாரிக்காமல் இருந்தால் சரி.

மக்கள் முன்னால் மக்கள் பிரதிநிதிகள் நிற்க வேண்டும்தான்; பதில் சொல்ல வேண்டும்தான்.அதற்காக மக்கள் போக்கிலே போய்விட முடியாது.

கம்யூனிஸ்டுஎன்று பெயர் வைத்து கட்சி நடத்துகிறவர்கள் நிச்சயம் அப்படி நடந்துகொள்ள கூடாது.

மக்கள் அவர்கள் விருப்பப்படி வாழ நாம் அனுமதிக்க முடியாதுஎன மாமேதை லெனின் எழுதியதை மறந்துவிட வேண்டாம்.

மக்கள் முன் நிற்கும் அந்தக் கடமைதான் முதன்மையானது என்றால் இங்கேயிருந்தும் இரண்டு பேர் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் போயிருக்கிறார்களே…

அவர்களுக்கு?

இல்லை, அடுத்து வரும் தேர்தல்களில் மோகன் பாலக்காட்டிலும், பெல்லார்மின் ஒத்தப்பாலத்திலும் நிற்கப் போகிறார்களா?

உங்கள் அணுசக்தி சமாச்சாரம் குறித்து தனி கட்டுரையே எழுத வேண்டும். அதை இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக ஒரு சந்தேகம்.

டாடாகொடுத்த காசை திருப்பி அனுப்பிவிட்டீர்கள்.

ரொம்ப நல்லது.

திருட்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் கொடுத்த மாமூலை?(உங்கள் கணக்கில் அதற்குப் பெயர் நன்கொடை)

 கல்லாவில் வாங்கிப் போட்டார்களா,

 அல்லது கண்ணெடுத்தும் பாரோம்என்று டாடாவுக்கு அனுப்பியதுபோல் திருப்பியனுப்பினார்களா?

தயவுசெய்து அச்சுதானந்தனிடம் கேட்டு விட வேண்டாம்.

தேசாபிமானி மேலாளரை கைகாட்டி விடுவார் அவர்.

கோத்ரெஜ் பீரோ மாதிரி ஏதோ ஒரு பீரோ வைத்திருக்கிறீர்களே… என்ன அது?

ம்… பொலிட்பீரோ?

அந்தப் பீரோவில் உள்ளவர்களிடம் கேட்டு தகவல் சொல்லுங்கள்.

மற்றவை விழிப்புணர்வு வழியாக…                                  

தீசுமாசு டி செல்வா

 2011 இல் நான்தான் முதலமைச்சர் என்று சொல்கிறாரே… சரத்குமார்?

ready_to_lead.jpg 

இது ரொம்ப அதிகம்.

அண்ணாச்சியின் முதலமைச்சர் ஆசையைச் சொல்லவில்லை.

அதை 2011 வரை ஒத்தி வைத்திருக்கிறாரே… அந்தப் பெருந்தன்மையைச் சொல்கிறோம்.

நல்ல விசயங்களை நாள் தள்ளிப் போடக்கூடாது. உடனே காரியத்தில் இறங்கிடணும்.

சாமுண்டி, நாட்டாமை, நாண்டு கிட்டுச் செத்தவன்னு எத்தினியோ அற்புதமான கேரக்டர்கள்ல வாழ்ந்து காட்டிய சரத் அண்ணாச்சி முதலமைச்சராக ஒரு படத்துலகூட வேஷம் கட்டலையேங்கறது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பெரிய குறைதான்.

காலம் இன்னும் கடந்து போய்விடவில்லை. இப்பவே சூட்டிங் ஆரம்பிச்சா வர்ற பொங்கலுக்குள்ள கண்டிப்பா ரிலீஸ் பண்ணிடலாம் அண்ணாச்சி.

இராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறாரே இராம. கோபாலன்?

  pmu-_05.jpg

கோபாலய்யர் தயவுசெய்து கோபித்துக் கொள்ளக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறோம்.

கோபாலனின் அப்பா இராமன் என்பது ஒரு நம்பிக்கை.

‘அதெல்லாம் இல்லை, பக்கத்து வீட்டுக்காரன்தான்’ என ஒரு சந்தேகம் வந்துவிட்டால்…?கோர்ட்டுக்குப் போகணும். மரபணு சோதனைக்கு உட்பட்டாகணும்.

“ஆத்துல உள்ளவாளை சந்தேகப்படாதேள். ஏன்னா இது என்னோட நம்பிக்கை சம்பந்தப் பட்டது” என தப்பித்து ஓட முடியாது வீரத் துறவி அவர்களே!

இந்து மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும் இதுதான் விதி. பகுத்தறிவுக்குப் பதில் சொல்ல வக்கற்ற எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள்தான்.

வயதாகி விட்டதால் முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும் என்கிறாரே ஞாநி?

pmu-_02.jpg

நல்ல யோசனை! ஆனா, ஒரேயொரு சிக்கல்.கண்ணு தெரியாத காலத்திலும் பக்த கோடிகளுக்கு ‘அருளாசி’ வழங்கிக் கொண்டிருந்த சீனியர் சங்கராச்சாரிக்கு,காது ‘டமாரம்’ ஆன நிலையிலும் இசை விழாக்களைப் பற்றி சங்கீத விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த சுப்புடுவுக்கு…

இதுபோல கட்டாய ஓய்வுத் திட்டத்தை ஞாநி அறிவித்திருந்தால்…

அது ‘ஆ.வி.’யிலோ, ‘ ஜூ.வி.’யிலோ கூட எழுதியிருக்கத் தேவையில்லை – அவர் சொந்த டைரியில் ஒரு வார்த்தை… ஒரேயொரு வார்த்தை எழுதியிருந்தால் போதும்…

என்ன சொல்கிறீர் ஞாநியாரே…?

பழையபடி ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், கருணாநிதியை முதியோர் இல்லம் அனுப்புவதுதான் ஒரே வழி என நினைத்தால் அதை நேரிடையாகவேச் சொல்லிவிடலாம். முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கி விடுமே என்று அச்சப்பட்டு சுற்றி வளைக்கத் தேவையில்லை.

ஞாநியின் கோர முகம் வெளிப்பட்டு நாட்கள் பலவாகிவிட்டது.

சோனியா காந்தி அவர் பெயரிலுள்ள ‘காந்தி’ என்ற சொல்லை நீக்கிவிட வேண்டுமென்று நியூயார்க்கில் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே….

pmu-_01.jpg 

போராடியவர்கள் காந்திக்குப் பிறந்தவர்கள், அல்லது பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்பத் தப்பு.

காந்தி என்ற ஆளே இருக்கக்கூடாது என்று கோட்சேவை வைத்துத் தீர்த்துக் கட்டியதே ஆர்.எஸ்.எஸ்.! அவாளோட சொந்தப் பிள்ளைகளும், தத்துப் பிள்ளைகளுமே இந்தப் ‘போராளிகள்’.

இவர்கள் ‘இந்தியனின்’ வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று வெள்ளையனின் கால் கழுவும் அக்ரகாரத்து அம்பிகள்.

என்ன ஒரு வினோதம் பாருங்கள்.

தாராளமயம் என்ற பெயரில் நமது நிறுவனங்களையெல்லாம் அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கிறவர்கள், பெயரை மட்டும் விட்டுத்தர அடம் பிடிக்கிறார்கள்.

நல்ல பாலிசி.

பாபர் மசூதி இடிப்பையும், இராமர் பால இடிப்பையும் ஒப்பிட முடியாது. பாபர் மசூதியை இடித்தது ஒரு கும்பல். இராமர் பாலத்தை இடிக்கப் போவது ஓர் அரசு என்கிறாரே… சோ?

pmu-_08.jpg

அரசு என்றால் புரிகிறது.

கருணாநிதி, டி.ஆர்.பாலு.

கும்பல் என்றால்?

என்கௌன்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வெள்ளை ரவி, பங்க் குமார் கும்பலா? அல்லது, அயோத்திக் குப்பம் வீரமணி கும்பலா?

எந்தக் கும்பலென்று தெளிவாகச் சொல்ல வேண்டாமோ…

அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளை ஒருவேளை தப்பா நெனச்சுப்புட்டா எவ்வளவு விபரீதமாயிடும்?

எங்கள மாதிரி விவரங்கெட்டவனுங்க நாட்டுல எத்தனையோ பேரு இருக்கிறோம்.

ஆனாலும், பார்ப்பனர்களே நீங்க ரொம்பவும் விவரமாகத்தான் இருக்கிறீங்க.

சொன்ன சொற்களைவிட, சொல்லாமல் விட்ட சொற்கள் ரொம்பவும் பொருள் பொதிந்தவை இல்லையா!

ஜக்கி வாசுதேவ் மரம் நடுகிறாரே….

pmu-_04.jpg

நட்டதெல்லாம் சரிதான்.

தண்ணி ஊத்தப் போறது யாரு?

“நான் ஊத்தப் போறேஞ்சாமி”ன்னு கோக்கோ கோலாக்காரன் பாட்டிலும் கையுமா வந்துடப் போறான் சாமி.

ஏன்னா, உங்க பிராஜெக்டுக்கு அவன்தானே பிரதான ஸ்பான்சர்.

தாமிரபரணியில தண்ணியெடுத்து அங்குள்ள பயிர் பச்சைகளை வாடச் செஞ்சதுக்கு இது பரிகாரம்போல என்று நம்மாளுங்க வழக்கம்போல கேணத்தனமா நெனச்சு வைக்க, கோலாக்காரன் தண்ணி ஊத்தினா பூச்சி மருந்து தெளிக்கிற செலவு மிச்சம்னு சுவாமிகளே நீங்க நினைக்கிறீங்களோ… என்னமோ…

ஆன்மீக வியாபாரிகளின் கணக்கே தனிதான்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 14000 பேரு பல் துலக்கி கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்களே…

pmu-_07.jpg

ஒரே ஆள் பதினாறாயிரம் பேருக்குப் பல்லை விளக்கி விட்டால் அது சாதனை.

அவனவன் பல்லை அவனவனே விளக்குவது என்ன சாதனை?

நமக்குத் தெரிஞ்சு ஜெயேந்திரன் மாதிரி நாலஞ்சு பேரைத் தவிர மத்தவங்க எல்லாம் ரெகுலரா பல்லு வெளக்குறவங்கதான்.

நல்ல வேளை,

கின்னஸ் சாதனைங்கற பேர்ல இந்தக் கிறுக்கனுங்க பதினாலாயிரம் பேரையும் ஒண்ணா கக்கூசுக்கு உட்கார வைக்காம விட்டானுங்க.

அதுவரைக்கும் தப்பிச்சோம்.

-சமூக விழிப்புணர்வு

 தீசுமாசு டி செல்வா  

rail-map-tamilnadu.jpg 

ஆகஸ்டு 25, நண்பகல்.

சேலம் இரயில்வே கோட்டம் அமைக்கப்படவும், அதற்கான தேதியை உடனே அறிவிக்கவும் நடந்த இரயில் மறியல் போராட்டச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது

.சி.பி.எம்.ஐ.த் தடை செய்து விட்டார்களாம்.

சன் டிவி தொடங்கி அல்ஜசீரா வரை சானலை மாற்றிப் பார்த்து விட்டேன்.

எங்கேயும் அந்தச் செய்தி இல்லை.

செய்தி கொண்டு வந்த அழகிரி என் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.

தகவல் உண்மையானது தோழா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதிகாரப்பூர்வமான செய்தி வரும். பார்த்துக் கொண்டே இரு.

குண்டைத் தூக்கிப் போட்ட அழகிரி போய்விட்டான்.

என்ன எளவு காரணத்துக்காகச் சி.பி.எம்.ஐ. தடை செய்திருப்பார்கள்?’

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கா?

இருக்காதே…!

அணுசக்தி ஒப்பந்தட்தை எதிர்த்தாலும், கூடங்குளத்தில் அதைஆதரிப்பவர்களாயிற்றே..

.முன்னது அமெரிக்கா; பின்னது ரஷ்யா! அவ்வளவுதானே விட்தியாசம்!

ஈழ விடுதலைப் போரிலிருந்து இந்திய இறையாண்மை வரை காங்கிரசுக்காரனுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தேசபக்தி பொங்கிப் பாய்ந்து பிரவாகமெடுக்கும் நம்ம காம்ரேடுகள்மீது தடை விதிப்பது தற்கொலை முயற்சியில் அல்லவா முடியும்?

கம்யூனிச புரட்சியாளர்களை காங்கிரசுக்காரன் வேட்டையாடுவான், காம்ரேடுகளோ காட்டிக் கொடுப்பார்கள், அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

அவர்களுக்கு அம்பானி என்றால் இவர்களுக்கு டாடா.

எதுக்குத் தடை?

 ஒருகாலட்தில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியையே கவிழ்ட்து விடுவார்கள் என பயந்த நேரு இவங்களைட் தடை செய்தது வாஸ்தவம்தான்,

பாவம், காய்கறி நறுக்கக்கூட கத்தியைக் கையில் எடுக்காத அகிம்சாமூர்ட்திகள் இவர்கள் என்ற உண்மை தெரிந்த நேரு வெட்கப்பட்டு, தடையை விலக்கிக் கொண்ட வரலாறை காங்கிரசுக்காரன் அதற்குக்குள்ளாகவா மறந்து போனான்?

எந்த நிமிடத்திலும் சி.பி.எம்.முக்குத் தடைஎன்ற பிளாஷ் நியூஸ் மின்னும் என்று நடுக்கத்தோடு சன் டி.வி. முன்னால் மணிக்கணக்கில் ஆடாமல், அசையாமல் இருந்த வேளையில்தோழாஎன்ற குரல் மீண்டும் கேட்டது

.அவன்தான்.

அழகிரிதான்

.என்ன தோழா… உன்னை கேணப்பயக் கணக்கா ஆக்கிப்புட்டேன்னு பீல் பண்றியா… சேலம் கோட்ட நியூஸ் இப்ப காட்டுவான்… அத நல்லா உத்துப் பாரு. அப்புறமா என்னைக் கேள்வி கேளு

அழகிரிமேல் வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சேலம், ஈரோடு, கோவை ஊர்களில் இரயில்கள் ஆங்காங்கே நிற்க, ஆயிரக்கணக்கில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும், ஆண்களும், பெண்களும் கட்சிக் கொடிகளுடன் தண்டவாளங்களில் உட்கார்ந்து ஆவேசமாக கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் கல்லக்குடி கொண்ட கருணாநிதிபோல தண்டவாளங்களின் குறுக்கே உயிரைப் பணயம் வைத்தபடி படுத்திருக்கும் பெண்கள்.சிக்னல்களை முடக்கிப் போடும் இளைஞர்கள்.இரயில் நகர முடியாதபடி தண்டவாளங்களில் கட்டைகளையும், மண்ணையும் அள்ளிப் போடும் சிறுவர்கள், முதியவர்கள்…

பார்க்கும் போதே என் தோள்கள் தினவெடுத்தன

.ஆகா… இந்தி எதிர்ப்புப் போருக்குப் பிறகு இப்படியொரு வீரஞ்செறிந்த போராட்டத்தை தமிழ்நாட்டில் இப்பதானப்பா பார்க்கிறேன்.

அழகிரி குறுக்கே புகுந்தான்.

உன் புல்லரிப்பை அப்புறம் வச்சுக்க.. போராட்டத்துல கலந்துகிட்டவுங்ககிட்ட ஒண்ணு குறையுதே… அத கவனிச்சியா?”

என்னப்பா குறையுது?”

அட குறை மாசத்துல பொறந்தவனே… போராட்டத்துக்கு வந்தவனெல்லாம் அவனவன் கட்சிக் கொடிகளோட வந்தானே… அத நல்லா உட்துப் பாத்தியா?”

பார்த்தேனப்பா.. அதுல என்ன பிரச்சனை? எவனாவது கொடியை தலைகீழாவோ, இல்ல அரைக் கம்பத்துலயோ கட்டிக் கொண்டு வந்து மானத்தை வாங்கி விட்டானுங்களா?”

போடா வெங்காயம்… தி.மு.க., காங்கிரசு, பா.ம.க., பா.ச.க., சி.பி.ஐ., பத்தாததுக்கு சில இடங்களில் எதிரணியிலுள்ள அ.தி.மு.க., ம.தி.மு.க. கொடிகூட இருந்துச்சு. அவ்வளவு ஏன் சந்திரலேகாவைத் தவிர வேற உறுப்பினரேயில்லாத சுப்ரமணியசாமி கட்சிக் கொடியைக்கூட ஒருத்தன் தூக்கிப் பிடிச்சிட்டு போராட்டத்துக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கான். ஆனா பிறவிப் போராளிகளான சி.பி.எம். கொடிகளில் ஒண்ணைக்கூடக் காணோமே. எப்படி? சி.பி.எம். இல்லாம ஒரு போராட்டமா? ஒருவேளை கட்சியைத் தடை பண்ணிட்டாங்க போல… அதனாலதான் போராளிகள் பதுங்கிட்டாங்கன்னு நெனச்சேன். இது ஒரு தப்பா சொல்லு?”

யோவ், வாயில என்னென்னமோ அசிங்கமா வருது… நீ நெனச்ச மாதிரியே ஒருவேளை சி.பி.எம்மைத் தடை பண்ணியிருந்தாலும் அவுங்க அதுக்கெல்லாம் அஞ்சக் கூடியவங்க கிடையாது. தலைமறைவா இருந்து யு.ஜி.ங்கிற அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பண்ணியாவது போராடுவாங்க. ஞாபகம் வச்சுக்கோ.

தோழா… உணர்ச்சி வசப்படாத. அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பத்தி சொன்னதெல்லாம் ரொம்பச் சரி. ஆனா, அதெல்லாம் நேரு காலத்தோட முடிஞ்சு போன கதையப்பா…. இப்ப அச்சுதானந்தனுக்கு எதிரா பினராயி விஜயன், பினராயிக்கு எதிரா அச்சு, ஜோதிபாசுக்கு எதிரா பட்டாச்சார்யா, பட்டாவுக்கு எதிரா ஜோதி இப்படி கட்சிக்குள்ளாற பண்ற உள்குத்து வேலைகள்தான் அவுங்களோட ஒரே யு.ஜி.பாலிடிக்ஸ்.கொஞ்சம் பொறு. போராட்டத்துல சி.பி.எம். ஏன் கலந்துக்கலைன்னு எதாவது சர்வதேச தட்துவ முலாம் பூசி அவுங்களே அறிவிப்பாங்க. அந்தச் செய்தியோட வந்து உன்னை அப்புறமாச் சந்திக்கிறேன்.

27, ஆகஸ்டு.

கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்தே விட்டதுஎன்றபடி சி.பி.ஐ. எம்மின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தீக்கதிரை எடுத்து என் முன்னால் போட்டான் அழகிரி.

இன்னைக்கு எழுதியிருக்கிற தலையங்கத்தைப் படிக்கிறேன் கேட்டுக்க….என்று தீக்கதிரின் தலையங்கத்தின் ஒரு பகுதியை படித்தான் அழகிரி.

கேரளத்தில் ஓணம் பண்டிகை என்பது மிக முக்கியமான கொண்டாட்டம் ஆகும். வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் கேரள மாநிலத்தவர் இந்தப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்த நேரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பாத்தியா உங்க சி.பி.எம்மோட கொள்க விளக்கத்தை… மக்களைச் சிரமத்திற்கு ஆளாக்காத போராட்டம்னு ஏதாவது உண்டா? இல்ல, அப்படியொரு போராட்டத்தை சி.பி.எம். இதுவரைக்கும் நடத்தியிருக்குதா?

இருபத்தஞ்சாம் தேதி மறியல் எடஞ்சல்னா மத்த நாள்ல நடத்தலாம்னுதானே அர்த்தம்?

 சரி, மத்த நாள்களில் மட்டும் என்னவாம்! வீட்டுக்குள்ள உக்காந்துருக்கப் பிடிக்காது, எங்காவது போய்ட் தொலைவோம்னு கிளம்புறவங்கதான் இரயில்ல போறவங்களா?

இன்டர்வியூ போறவன், சாகிறதுக்கு முந்தி கடைசியா ஒரு தடவை அப்பனையோ, ஆட்தாளையோ கண்ணால பாத்திடலாம்னு போறவன், அக்கா-தங்கச்சி கல்யாணத்துக்குக் காசு சேத்துக்கிட்டுப் போறவங்கதானே இரயில் பயணிங்க!

மறியல் நடந்தா அவுங்க பாதிக்கப்பட மாட்டாங்களா?

பாதிப்பில்லாம நடத்தணுமுன்னா கூட்ஸ் வண்டியைத்தான் போய் மறிக்கணும்.

ஆனா அதுலகூட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள்னு இருக்குமே? என்ன செய்யறது?

 பேசாம இரயில்வே ஷெட்டுக்குள்ளாற கழுவுறதுக்கு கொண்டுபோய் நிறுத்தி வச்சிருக்கிற பெட்டிங்க முன்னால உளுந்து புரண்டு மறியல் செய்யலாமா?

நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே… நோகாம நோம்பு கும்பிடுறதுன்னு… அது இதுதானோ…!

பாம்பும் சாகக்கூடாது; தடியும் ஒடியக்கூடாது! நல்ல போராட்டம்!

முதலாளிங்களுக்கெதிரா தொழிலாளிகளை மொட்டை அடிச்சு ரோட்டுல ஊர்வலம் வுடுறது, கையில் திருவோட்டுடன் தொழிற்சாலைகளை முற்றுகையிடுவதுன்னு ஒண்ணுக்கொண்ணு புரட்சிகர நடவடிக்கையில் முன்னோக்கிப் பாயும் சி.பி.எம்.மிடமிருந்து இப்படிப்பட்ட மொண்ணைத்தனமான அறிவுரைகள்தான் வரும்னு தப்பா நினைச்சிடக்கூடாது. அதுக்கு அவுங்க எழுதியிருக்குற அடுத்த பாராவையும் கொஞ்சம் படிக்கணும்.. இதோ படிக்கிறேன் பாரு.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியைச் சந்திட்து ரயில் மறியல் போராட்டம் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள்.

என். வரதராஜனும், டி.கே. ரங்கராஜனும் சி.பி.எம்மின் தலைவர்களா, அல்லது கேரள சமாஜட்தின் சிறப்புப் பிரதிநிதிகளா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும். போராட்டம் குறித்து கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய காரணம் என்ன? அவருக்குத் தெரியாமலா, சொல்லாமலா வீரபாண்டி ஆறுமுகம் போராட்டத்தை அறிவித்தார்?

சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.

மறியல்னு சொன்னதும் அவுந்த வேட்டியைக் கட்டிக்கக்கூட நேரமில்லாது கோபாலபுரம் நோக்கி ஓடினவங்க, என்னிக்காவது திருவனந்தபுரம்போய் நல்லவரும், வல்லவருமான அச்சுதானந்தன்கிட்ட சேலம் கோட்டட்தை எதிர்க்காதீங்கன்னு சொன்னாங்களா?

அவ்வளவு தூரம்கூட போக வேணாம், சென்னையில் கேரள டூரிஸட்துக்கு அடிக்கல் நாட்ட வந்தாரே… அப்ப, கூட நின்னு போட்டோவுக்கு போஸ் குடுத்து, சிரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல அந்தாளு புத்தியில் உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லலை?”

எப்படியப்பா சொல்லுவாங்க? சேலம் கோட்டம் வர்றத அவரு எதிர்க்கவேயில்லைன்னு இதோ… தீக்கதிர்லேயே எழுதியிருக்காங்களே?”

அது சரி, தலித் மக்கள் கண்டிப்பா கோயிலுக்குள்ளாற வரணும்னு சங்கராச்சாரி சொல்லியிருக்கிறாரே உனக்குத் தெரியுமா?”

யோவ், சேலத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கப்ப சம்பந்தமில்லாம ஏன் காஞ்சிபுரத்துக்குப் போயிட்ட…

சம்பந்தமிருக்குப்பா… நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு. தலித் மக்கள் கோயிலுக்கு வரணும்னு சங்கராச்சாரி சொன்னாரா, இல்லியா?”

அட என்னப்பா நீ, அந்தாளு சொன்னதுல பாதியை விட்டுப்புட்டு மீதியைச் சொல்ற… குளிச்சு சுத்த பத்தமா இருந்தா தலித் மக்களும் தாராளமா கோயிலுக்கு வரலாம்னுதான் அவரு சொன்னாரு.

இப்ப சேலம் கோட்டத்தைப் பட்தி அச்சுதானந்தன் சொன்னதுக்கு வர்றேன். கோவை, திருப்பூரு, போத்தனூரு, மேட்டுப்பாளையம் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு கோட்டட்துல வச்சிருக்கிறதாயிருந்தா அவரு சேலம் கோட்டம் வர்றத ஆதரிப்பாராம். இதுதான் அவரு டெல்லியில சொன்னது. இந்த முன்னாள் புரட்சியாளருங்க அந்தாளு பேச்சின் பின்பாதியை கிழிச்சு அவுங்க சூத்தாம்பட்டைக்கடியில வச்சுக்கிட்டு, முன்பகுதியை மட்டும் சொல்லி அச்சுதானந்தனுக்கு ஒளிவட்டம் சுத்துறாங்க..

.ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க, இந்த மாதிரி மொள்ளமாறித்தனமா வெட்டி, ஒட்டி எழுதினா சங்கராச்சாரியை புரட்சிக்காரனாவும், பெரியாரை கடைந்தெடுத்த மத அடிப்படைவாதியாகவும் ஒரே நொடியில் மாத்த முடியும்.

சுருக்கமாச் சொன்னால் இந்து என்.ராம், சோ, ரவிக்குமார் வகையறாக்களின் வரிசையில் இப்ப இவங்க…

எழுத்தாளனுங்க கதய வுடு. அப்படித்தான் இருப்பானுங்க. இவங்க கம்யூனிஸ்டுகளாச்சே. இருக்குற எடத்துக்குன்னு கொஞ்சமாவது விசுவாசம் காட்ட வேணாமா? இவங்க உண்டியல்ல போட்ட காசுக்கு நாலு பொறை வாங்கி நாய்க்குப் போட்டிருந்தா அது நமக்கு நன்றியோட வாலையாவது ஆட்டியிருக்குமே

உணர்ச்சி வசப்படாத தோழா. அவங்க கம்யூனிஸ்டுங்கதான்; சி.பி.ஐ. (எம்)தான். ஆனா, நீங்க எல்லோரும் நெனக்கிற மாதிரி எம்ன்னாமார்க்சிஸ்ட்அப்படின்னு அர்த்தம் கெடையாது. மலையாளீஸ்னுதான் பொருள்.

ஏம்ப்பா… இந்தப் பட்டம் ரொம்ப ஓவருப்பா…

ஓவரா, இல்லியான்னு அப்புறம் சொல்லு. போன வருசம் மங்களூர் போற வெஸ்ட் கோஸ்ட் வண்டிய கோவைக்கு வராம ரூட்டை மாட்தி கொண்டு போயிட்டானுங்க. உடனே கோவை ராமகிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழக ஆளுங்க எல்லாம் சேந்து தினமும் அபாயச் சங்கிலியைப் புடுச்சு இழுத்து நிப்பாட்டி இரயில்வே போலீசிடம் அடிபட்டு, மிதிபட்டு கடைசியா அந்த வண்டிய கோவைக்கு வர வச்சாங்க. அப்ப மார்க்சிஸ்ட்என்ன பண்ணிச்சு தெரியுமா?”

இப்ப பண்ணுன மாதிரி அப்பவும் அதுல கலந்துக்கலையா?”

அதுகூட பரவாயில்லப்பா… ரூட்டை மாட்தி வண்டியை விட்டதால் அஞ்சு லட்ச ரூபாய் கலெக்ஷன் அதிகமாயிடுச்சுன்னு தீக்கதிர்ல ஒரு கள்ளக்கணக்கை செய்தியா எழுதிப் போட்டு நம்ம ஆளுங்க முதுகுல குட்துனாங்க. இப்ப சொல்லு இவங்க மார்க்சிஸ்டா, மலையாளிஸ்டா?”

இப்ப இருக்குற பாலக்காடு கோட்டமே அப்ப நம்ம தமிழ்நாட்டு போத்தனூர்லதான் இருந்ததுன்னு சொல்றாங்க. அதை பாலக்காட்டுக்கு மாட்துறப்ப நம்ம ஆளுங்க காட்டுன பெருந்தன்மை ஏன் மலையாளிங்கக்கிட்ட இல்லாமப் போச்சு?”

யோவ், சும்மா வாயைக் கிளறி வாங்கிக் கட்டிக்காத. நாமளா விருப்பப்பட்டு கொடுத்தாத்தான் அது பெருந்தன்மை. ராவோட ராவா அவன் கடட்திக்கொண்டு போயிருக்கானா அதுக்குப் பேரு களவாணிட்தனம். அத ஏன்னு கேக்க வக்கத்துப் போய் இங்க இருந்தானுங்க பாரு நம்மாளுங்க… அது கையாலாகாட்தனம். பெருந்தன்மை அது, இதுன்னு சொல்லி நம்மாளுங்களுக்கு முதுகு சொறிஞ்சு விடுறத மொதல்ல நிப்பாட்டு.

 1956 இல் தந்தை பெரியார் வச்ச கோரிக்கைதான் இந்தச் சேலம் கோட்டம். தமிழ்நாட்டுப் பகுதிகள் தமிழ்நாட்டுக் கோட்டத்துக்குள்தான் இருக்கணும்கற இனவாத சிந்தனையெல்லாம் இதுக்குக் காரணமில்லை. தமிழ்நாட்டைச் சுரண்டி அவன் மட்டும் அனுபவிக்கிற கொடுமை தாங்காமத்தான் இந்தச் சேலம் கோட்ட திட்டமே உருவாச்சு.

ஜோலார்பேட்டை தொடங்கி கோவை வரையுள்ள ரெயில் நிலையங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு. பல ரெயில் நிலையங்களில் குடிக்க மட்டுமில்ல, குண்டி கழுவக்கூட தண்ணி கிடையாது. திருப்பூரில் மழை வந்தா ஒதுங்கி நிக்க ஒழுங்கா ஒரு பிளாட்பாரம் கிடையாது. ஆனா, அதே கோட்டத்துல பாலக்காட்டிலிருந்து குட்டிபுரம்கிற துளியூண்டு ஊரு வரை தாஜ்மஹால் கணக்கா கட்டுமானம் பண்ணி, அழகுபடுத்தி வச்சிருக்காங்க. இனி அடுத்த தடவை உலக அதிசயங்களுக்கு பட்டியல் போட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோடு பாலக்காடு, குட்டிபுரம் நிலையங்களையும் லிஸ்டில் சேர்த்து விடலாம்.

சம்பாதனை இங்கிருந்து! சுகபோகம் அங்குள்ளவர்களுக்கு.

சாதாரண பாசஞ்சர் வண்டிகள் விடும் அதிகாரம் கோட்டத்திற்கு உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலக்காட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட பாசஞ்சர் வண்டிகள் ஓடுது. அதில் பட்தில் ஒரு பங்கு வண்டிகூட கோவைக்கு, திருப்பூருக்கு இல்லை.

 கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு அறிவிக்கப்பட்ட விரைவு வண்டி இன்னும் விடப்படவில்லை. கேட்டால் பெட்டிகள் கைவசம் இல்லையாம். ஆனா திருவனந்தபுரத்துக்கு ஒரு தினசரி வண்டி, வாரம் ஒருமுறை வண்டி, மங்களூருக்கு பாலக்காடு வழியாக வாரம் மூன்று முறை வண்டியெல்லாம்…. எப்போதோ ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அனேகமா லாலு பாராளுமன்றத்தில் இதை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே பிளாட்பாரங்களில் பெட்டிகளைக் கொண்டுபோய் நிப்பாட்டியிருப்பார்கள்.

பெங்களூரிலிருந்து கோவை வரை வந்து கொண்டிருந்த இன்டர்சிட்டியை எர்ணாகுளம் வரை நீடித்தார்கள். மீட்டர்கேஜ் காலட்தில் சென்னையிலிருந்து மதுரை வரை சென்று கொண்டிருந்த கூடல் விரைவு வண்டியை- அதைவிட இன்னொரு மடங்கு அதிக தூரம் நீடிட்து குருவாயூர் வரை கொண்டு போனார்கள். சென்னை எழும்பூரிலிருந்து கரூர் வழியாக ஈரோடு வரை சென்று கொண்டிருந்த வண்டியை கோவை வரை நீடிட்தவர்கள் கடைசியில் அதை மங்களூர் வரை இழுத்து விட்டார்கள்.

ஒரு வண்டி அதிகமான தூரம் வரை பயணிப்பது நல்லதுதானே?”

நிச்சயம் நல்லதுதான்.நமக்கல்ல, மலையாளிகளுக்கு.சந்தேகமிருந்தா நான் இங்கே குறிப்பிட்ட வண்டிகளில் நல்ல வசதியாக உட்கார்ந்தும், படுத்துக் கிடந்தும் போகிறவர்கள் யார் என்று போய்ப் பாரு. மலையாளத்து சேச்சிகளும், சேட்டன்மார்களுமாகத்தான் இருக்கும்.

அப்ப நம்மாளுங்க?”

ஜெயலலிதா வேனில் எஸ்.டி.எஸ். தொங்கிக் கொண்டு போனாரே… நினைவிருக்கிறதா? அதுபோல் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தொங்கிக் கொண்டும், விழுந்து வாரிக்கொண்டும் போவார்கள் நம்மாளுகள்.

கோவைக்கும் – இருகூருக்குமிடையில் உள்ள 17 கிலோ மீட்டர் ரெயில்பாதை சேட்டன்களின் உதாசீனத்தால் இன்னமும் முடிக்கப்படாமல் இழுத்துக் கொண்டு கிடக்கிறது.

 என்னய்யா காரணம்?’னு கேட்டா பாறை உடைக்குறது கஷ்டமாயிருக்கு. லேட்டாதான் வேலை ஆவும்னு மந்திரி வேலு வாயால சொல்ல வைக்கிறாங்க.

 இதைவிட கஷ்டமான பாம்பன் பால வேலையை ஒரே வருடத்தில் முடிச்சு வண்டியும் வுட்டாச்சு. இருகூரில் பாறையப் புடுங்கறது அவ்வளவு பெரிய கஷ்டமா?ன்னு கேக்க நம்ம பாட்டாளிமந்திரிக்கு துப்பில்லை.

இதையெல்லாம் பேசிட் தீத்துக்கலாமுன்னு அச்சுவும், அவரோ தமிழ்நாட்டு சகபாடிகளும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டேயிருக்கிறாங்களே…

என்னத்தப் பேசறது?

கோட்டம் வேணாமுன்னு அச்சு சொல்வார்.வேணுமுன்னு கலைஞர் சொல்வார்.

அப்படின்னா கோவையும், திருப்பூரும் பழையபடி பாலக்காட்டிலேயே இருக்கட்டும்பார் அவர்.

 அது ஆவுறதில்லை என்பார் இவர்

.ரெண்டு வருசம் இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் அதிகாரிகள் மட்டட்தில் இதே திரைக்கதை – வசனங்களுடன் பேச்சு தொடரும்.

கொஞ்ச நாளில் அதுவும் சலித்துப்போய் லொக்கேஷனை மாற்றுவார்கள்

.திருவனந்தபுரம், சென்னை… அப்புறம் ரெண்டு பேருக்கும் பொதுவா டெல்லி.

 இதற்கிடையில் நம்ம அச்சுவுக்கு கேரள வாக்காளர்கள் பிரிவு உபச்சார விழாநடத்திவிட்டால் புதிதாக வரும் அந்தோணியுடனோ, சாண்டியுடனோ பழையபடி ஆரம்பித்த இடத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கும்.

காவிரித் தண்ணிக்குப் பேசிப் பேசியே சங்கு ஊதியதை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களல்லவா?அதனால்தான் நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு இந்த உதவாக்கரை திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு பேசலாம் வாஎன ஜாடை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திட்டமிட்டபடி சேலம் கோட்டம் ஆரம்பிக்கப்படுமா?

படலாம்.

கூடவே வெஸ்ட் கோஸ்ட் இரயில்வேஎன்ற பெயரில் அவர்களுக்கு ஒரு மண்டலம் ஆரம்பிக்க அறிவிப்பும் வரலாம்.

ஒரு மண்டலத்துக்கு நான்கு கோட்டங்கள் வேண்டுமாம்.

கர்நாடகத்திடம் போய் கேட்க முடியாது. காலில் போட்டிருப்பதை கையில் எடுட்து விடுவான்.

அப்புறம் கோட்டத்துக்கு வழி?

பெருந்தன்மைமிக்க நாமிருக்க, அவர்களுக்குப் பயமேன்?

 கோட்டமாகப் பிரிந்த சேலம், மண்டலமாக பழையபடி மலையாளிகள் கையில் போய்விடும்

.வாழ்க மார்க்சிஸ்டுகளின்தேசிய ஒருமைப்பாடு! சமூக விழிப்புணர்வு