‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது.
“அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல்.
அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படிக் கப்பலேறியிருக்காது.
கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?
“பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!”
– இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு.
“கிருமியைக் கொல்ல.”
– இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு.
உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே!
மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே!
பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலை ஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!
அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்?
பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்?
சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.
“கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?
“நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என பதில் சொல்லும் ஜென்மம் எது?
கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை;
இடைப்பட்ட ஏதோவொண்ணு.
“இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே.
“கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால்… சந்தேகமே வேணாம்… கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.
புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு “வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.
கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?
அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும்.
தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.
ஜூலை 17, 2008 at 7:09 முப
மிகச்சரியான விமர்சனம்
ஜூலை 17, 2008 at 7:32 முப
i totally accept
ஜூலை 17, 2008 at 9:19 முப
இது போன்ற அரைகுறைகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
ஜூலை 18, 2008 at 10:25 முப
சமீபகாலமாக இது போன்ற பிதற்றல்கள் அதிகமாகவே wordpress காணப்படுகிறது. எல்லா படைப்பிலும் உள்ளே இருக்கும் உழைப்பு மற்றும் உட்கருத்து மட்டும் கண்டு அதை விமர்சனம் செய்தால் மிக்க நனறாக இருக்கும்.
https://theesmas.wordpress.com/aboஉட்/ தங்களின் முகப்பு அறிமுகம் மிக்க நன்றாக உள்ளது ஆனால் தங்களின் பதிப்பில் முதிர்ச்சி தெரியவில்லை! இதற்கு ஒரு பதிவு வெளியிட்டு wordpress ன் பதிவு எண்ணிக்கையை உயர்த்த வேண்டாம்.
ஜூலை 18, 2008 at 11:37 முப
Vanakkam…
Selva… ungalin dhasavathara vimarsana katturai padithen..
vithyasamaga athe samayam vilankatha silavatrai
vilakkuvathakavum irunthathu,,,Paratugal.
thozhamaiyudan,
Bharathi..
ஜூலை 18, 2008 at 2:19 பிப
dhasavadharam paarthu moonru mani neram veen. Indha vimarsanam padithu muppathu nimidam veen. kadavul maruppu karuthukkalai kamal padathil theduvathu romba periya buddhisaali thanamthaan.
ஜூலை 24, 2008 at 11:49 முப
Hi,
I studied your review on movie Dasawatharam. I have few comments on your review.
I too agree with lots of things you have discussed. But I want to tell you that this is a commercial movie.
And also Kamal is a commercial actor. Knowing this (most of the people knows) I could not stop thinking what your
review is trying to do. OK I dont want to elaborate on this as I believe that life has no single purpose instead it could have many…!!!
so as your review…..
The strong reason i mailed you this feedback is some of the contents were objectionable to people who treat all human beings as equal.
The last para which asks “Ni ambilai thane” is really a male chauvinistic one….I feel this one is against the third sex….
And the para just makes me think that your review is also like a commercial tamil movie and nothing higer intellect reside in it….
I await your reply….
Regards,
Rajesh K
ஏப்ரல் 12, 2009 at 7:31 பிப
நான் அந்த படத்தை காண வில்லை… ஆனால் என் வரையில் அடுத்தவர் நம்பிக்கைகளை காயப்படுத்தாமல், அதே சமயம் உண்மை நிலையை உரக்க சொல்லும் தகுதி ஒரு சிலருக்கே உண்டு… இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாத்திகம், ஆத்திகம் இரு வேறு பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம்…. இதில் சில ஆத்திகர்கள் நாத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்….சில நாத்திகர்கள் ஆத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்….
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்துக்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையை குறை சொல்லி மட்டம் தட்டி, வெளியே பார்ப்பதற்கு அருமையான கலாச்சார படம் என்று சொல்லி படம் எடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்களும் (இந்த வார்த்தையை உபயோகிப்பது மிக நெருடலாக இருந்தாலும், இவர்களுக்கு இது சரியான பெயர் தான்) இங்கு உண்டு….இதில் கமல் எப்படிப்பட்ட ஜென்மம் என்று புரிந்தவர்களுக்கு உங்கள் பதிவு சாட்டையடி….
ஆத்திகமோ, நாத்திகமோ உன் வரையில் நீ சரியாக உறுதியாக இரு…. அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை….
பிப்ரவரி 1, 2010 at 3:07 முப
அனைவருக்கும் அன்பு வணக்கங்களுடன் அருள் பாலன், பகுத்தறிவு படைத்தவர்கள் எப்போதும் வெளிச்சமகதான் பேசுவார்கள், தமிழ் பேசும் பகுத்தறிவு படைத்தவர்கள் சிலரில் திரு கமலஹாசன் அவர்களையும் எனக்கு பிடிக்கும் அனால் இந்த கதையை சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம்
ஏப்ரல் 6, 2012 at 1:43 முப
திரு தீஸ்மாஸ் டி செல்வா போன்ற கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சாட்டையடி கொடுக்கலாம் அதற்கு பதிலாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிலுக்கு சாட்டையடி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும். கடவுள் இருக்கிறார் என்பதை நேரடியாக யாரும் நிரூபிக்க முடியாது திரு.தீஸ்மாஸ் டி செல்வா உட்பட. கற்பனையான கதைகளை சொல்லியே கடவுள் இருப்பதாக நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். அது மற்றவர்கள் மீதான அக்கரையில் அல்ல, தங்களது சிந்தனையில் வந்ததை மற்றவர்களிடம் திணிக்க முயற்சி செய்வது. தங்கள் வீட்டிற்குள் மட்டும் கடவுள் நம்பிக்கை கொண்டு இருந்தால் அதை எந்த ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. பொது இடத்தில், பிறரும் பயன்பட வேண்டும் என்பதாக சொல்லிக்கொண்டு, பேசுகிற போதுதான் அதே அளவில் பொதுமக்கள் மீதான, மனிதர்கள் மீதான அக்கரையில் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு. ஆத்திகம் என்பது மனிதர்களின் சுய சிந்தனையை மழுங்கச் செய்து, அனைத்தும் கடவுள் பார்த்துக்கொள்வார்கள் என்று பிறரை சார்ந்து, கற்பனையான வாழ்க்கை வாழ்வது. நாத்திகம் என்பது “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு” போல சுயமாக சிந்தித்து, இயற்கையை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் சுயமாக வாழ்வது.