தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்கள் சில சங்கடங்களைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறாரே ப. சிதம்பரம்…
சாட்டை
காங்கிரஸ்காரனாக இருந்து கொண்டே அக்கட்சியைக் கல்லறைக்கு அனுப்பும் தனது சதித்திட்டத்தை பச்சையாக எப்படிச் சொல்வார்? அதுதான் ‘தேசநலன்’ அது, இது என்று சுற்றி வளைத்து பூடகமாகச் சொல்கிறார் ப.சி.
“காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய முதல் வேலை” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். தன் காலத்தில் தமிழ் நாட்டுக்குள் அதைச் சாதிக்கவும் செய்தார்.
தொடர்ந்து அகில இந்திய அளவில் ஒழிப்பு வேலை செய்து அதை பாடையில் தூக்கி வைக்க வேண்டிய வீரமணி, கலைஞர் வகையறாக்கள் அக்கட்சியைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்றார்கள்.
இந்தக் கொடுமையை காணச் சகியா சிதம்பரம் பெரியார் பணி முடிப்பது ஒரு தமிழன் என்ற முறையில் தன் தோள்மேல் விழுந்த கடமையென கிளம்பியிருக்கிறார்.
பெரியார் தொண்டராக இல்லாவிட்டால் என்ன? கதர் சட்டை அணிந்த ஒரு கறுப்புச் சட்டையாக அவரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை.
சொத்தை அடமானம் வைத்தால்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலைக்கு நம்மை கொண்டு போனாலும் அவர் நம்மாளுதான்… நாம அவர் பக்கம்தான்.
தேச நலனுக்காக இந்தச் சங்கடத்தை தாங்கிக் கொள்வோம்.
ஜூலை 9, 2008 at 8:55 முப
மக்களைப் பற்றி எப்போதுமே சிந்திக்காமல்…
நாட்டு நலனையும் தன் காலில் போட்டு மிதித்து…
இதன்படி வழிநடப்பதாகச் சொல்லப்படும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நம் நாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் இறையான்மையையும்…
தன் வீட்டு கழிப்பறைத் தொட்டியில் தள்ளி…
ஒரு விலைமாதருக்கு இருக்கும் குறைந்தபட்ச நம்பகத்தன்மையோ கடமை உணர்ச்சியோ சிறிதும் இன்றி…
நாட்டைச் சுரண்டும் ப.சி. வகையறாக்களே…
செத்து சுடுகாட்டுக்குப் போகும்போது எதட எடுத்துக்கொண்டு போகப்போகிறீர்கள்…