உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் இடித்து நொறுக்கப்பட்டு விட்டதே….
சாட்டை
நம்பவே முடியலீங்க.
“சாதியைக் கட்டிக்காத்த ஒரு சுவர் நாம் வாழும் காலத்தில், அதுவும் நம் கண் முன்பே இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட காட்சியையா?”
சேச்சே…
“ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாமல் கடைசி வரை கலைஞர் ‘உறுதியாய்’ நின்றதைச் சொல்கிறீர்களா?”
அதுவும் இல்லையப்பா…
“அப்படியானால் வேறு என்ன?”
“திருவரங்கம் கருவறையிலும், சிதம்பரம் நடராசன் சன்னதியிலும் பார்வையாளர்களாக நின்று தீட்சிதர்களோடு ‘சமூக நல்லிணக்கம்’ காத்த சி.பி.எம்., உத்தப்புரத்தில் திடீர் பிள்ளையார்போல் திடீர் சாதி எதிர்ப்புப் போராளியாக அவதாரமெடுத்த அதிசயத்தை சத்தியமாக நம்பவே முடியவில்லை.”