கருணாநிதியின் ராமர் விமர்சனத்தினால்தான் குஜராத், கர்நாடக மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெற்றது என்று அய்யா நெடுமாறன் கூறுகிறாரே….
சாட்டை
அய்யா கொஞ்சம் வெவரமானவருங்கோ!
வழக்கமாக வாக்குப் பதிவுக்கு முன் பலரும் கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. முடிந்தவுடன் சிலர் கணிப்பு நடத்துவார்கள்.
அய்யா அவர்களோ தேர்தல் நடந்து, பதவியேற்பும் முடிந்தபின் கணிப்பை நடத்தியிருக்கிறார்.
என்னவொரு வசதி பாருங்க!
‘சொன்னது என்ன? நடந்தது என்ன?’ என்று யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியாது. தன் சொந்த ஆசைகளை மக்களின் விருப்பமாக வேறு சொல்லி வைக்கலாம்.
“அய்யய்யோ… பழையபடி பி.ஜே.பி. வந்துடும்போல் இருக்கே…” என்றபடி கவலை ரேகைகளை முகத்தில் தேக்கலாம். உள்ளுக்குள்ளோ அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கலாம்.
ஆனா ஒண்ணு, கணிப்பு அண்ட் காமெடி கோஷ்டிகளான சுப்ரமணியம் சாமி, ‘லயோலா’ பாதிரி ராஜநாயகம் மாதிரி ஆளுங்க பொழப்புல கொஞ்சம் மண் விழும்.
தொழில் போட்டியில அவுங்களோட தகராறு வரலாம். அய்யா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
ஜூன் 29, 2008 at 5:25 பிப
inimelavathu thodarnthu ezhuthuveengala ?? ?
ஜூலை 4, 2008 at 4:10 முப
sataiyai pathu suthugan tholarae num udabiluma suthuvathu