ஜூன் 2008


உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் இடித்து நொறுக்கப்பட்டு விட்டதே….

சாட்டை

 

நம்பவே முடியலீங்க.

 

சாதியைக் கட்டிக்காத்த ஒரு சுவர் நாம் வாழும் காலத்தில், அதுவும் நம் கண் முன்பே இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட காட்சியையா?”

 

சேச்சே…

 

ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாமல் கடைசி வரை கலைஞர் உறுதியாய்நின்றதைச் சொல்கிறீர்களா?”

 

அதுவும் இல்லையப்பா…

 

அப்படியானால் வேறு என்ன?”

 

திருவரங்கம் கருவறையிலும், சிதம்பரம் நடராசன் சன்னதியிலும் பார்வையாளர்களாக நின்று தீட்சிதர்களோடு சமூக நல்லிணக்கம்காத்த சி.பி.எம்., உத்தப்புரத்தில்  திடீர் பிள்ளையார்போல் திடீர் சாதி எதிர்ப்புப் போராளியாக அவதாரமெடுத்த அதிசயத்தை சத்தியமாக நம்பவே முடியவில்லை.

(படமே ஒரு கேள்விதான்)

சாட்டை

 

 

ப்ளீஸ் மேடம்! காலை கொஞ்சம் சரியா போட்டுக்கங்க… நீங்க நெனக்கிற மாதிரி தொழிலதிபருங்க யாரும் முன்னால இல்ல, எல்லாரும் உங்க பின்னாலதான் உட்கார்ந்திருக்காங்க…

 

கருணாநிதியின் ராமர் விமர்சனத்தினால்தான் குஜராத், கர்நாடக மாநிலங்களில் பா.ச.க. வெற்றி பெற்றது என்று அய்யா நெடுமாறன் கூறுகிறாரே….

சாட்டை

அய்யா கொஞ்சம் வெவரமானவருங்கோ!

வழக்கமாக வாக்குப் பதிவுக்கு முன் பலரும் கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. முடிந்தவுடன் சிலர் கணிப்பு நடத்துவார்கள்.

 

அய்யா அவர்களோ தேர்தல் நடந்து, பதவியேற்பும் முடிந்தபின் கணிப்பை நடத்தியிருக்கிறார்.

என்னவொரு வசதி பாருங்க!

 

சொன்னது என்ன? நடந்தது என்ன?’ என்று யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியாது. தன் சொந்த ஆசைகளை மக்களின் விருப்பமாக வேறு சொல்லி வைக்கலாம்.

 

அய்யய்யோ… பழையபடி பி.ஜே.பி. வந்துடும்போல் இருக்கே…என்றபடி கவலை ரேகைகளை முகத்தில் தேக்கலாம். உள்ளுக்குள்ளோ அதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கலாம்.

 

ஆனா ஒண்ணு, கணிப்பு அண்ட் காமெடி கோஷ்டிகளான சுப்ரமணியம் சாமி, ‘லயோலாபாதிரி ராஜநாயகம் மாதிரி ஆளுங்க பொழப்புல கொஞ்சம் மண் விழும்.

 

தொழில் போட்டியில அவுங்களோட தகராறு வரலாம். அய்யா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் தப்பில்லை என்று விஜயகாந்த் சொல்கிறாரே…?

சாட்டை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உளறி விட்டார்என்று சொல்ல வழியில்லை.

பேசியிருப்பது பகல் நேரத்தில் என்பதால்.

 

ஒருவேளை புலிகளுக்கு ஆதரவாகக்கூட கேப்டன் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்.

 

கார்கில் போரில் கைலாயம் போன இராணுவத்துக்குச் சவப்பெட்டி வாங்குனதுக்கே கமிஷன் அடிச்ச பெருச்சாளிங்க நம்மாளுங்க…!

 

ஆயுத பேரத்துல கை சும்மாவா இருந்திருக்கும்?

அதை எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போறதைவிட சிவகாசியிலிருந்து லெட்சுமி வெடி, தௌசன்ட் வாலா வாங்கி, வன்னிக் காட்டுக்குப் போவதே புத்திசாலித்தனம். பாதுகாப்பும் கூட.

இப்போது புரிகிறதா?

 

சிங்களனை உதை வாங்க வைக்கவே ஆயுதம் கொடுக்கச் சொல்கிறார் நம்ம கேப்டன். இந்தப் போர் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் குடிகாரன்’, ‘உளறுவாயன்என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது.

 

ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….?

சாட்டை!

 

எப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது.

 

இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்!

 

முரண்பாடு என்ன தெரியுமா?

 

பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை.

 

ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி

நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.

 

நமக்கு வேறொரு சந்தேகம்:

சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர்.

 

அவர் இப்போது புழல் சிறையில்…

கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…

 

ஏன் இந்தப் பாரபட்சம்?