திசெம்பர் 2007


27% ஒதுக்கீடு வழக்கை பார்ப்பன நீதிபதிகள் விசாரிப்பதற்குப் பதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதிகள் விசாரித்தால் நியாயம் கிடைக்குமே….

சாட்டை

d_09sd.jpg

கோரிக்கை இத்துடன் நின்று விடுமா?

விபச்சார வழக்கை விசாரிப்பவர் அதன் புரோக்கராகவோ, வாடிக்கையாளராகவோ இருந்தால் நல்லது….

சினிமாக்காரன் பஞ்சாயத்தை பைசல் பண்ணுபவர் குறைந்தபட்சம் ஒரு குத்தாட்டமாவது போட்டிருக்க வேண்டும்… என்றெல்லாம் நீளுமே!

தீர்ப்பு என்ன வரும் என்று தெரிந்தேதான் வழக்கை அங்கு கொண்டு போகிறார்கள்.

ஆளை மாற்றுவது, ஆபீசை மாற்றுவது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.

திண்ணியம் வழக்கில், தலித்துகளின் வாயில் மலம் திணித்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றி…

சாட்டை

விபச்சாரிகளிடம் போனால் எய்ட்ஸ் வரும்!

இது தண்டனை.

ஜலதோசம் வரும்என்றால்….

இதுவும் தண்டனைதான்.

– சமூக விழிப்புணர்வு

தேவகௌடா பில்லி சூனியம் வைத்து விட்டதாக எடியூரப்பா சொல்கிறாரே…

சாட்டை

d_06psd.jpg

அபாண்டமான குற்றச்சாட்டு.

கௌடா முட்டாளாகக்கூட இருக்கலாம்.

ஆனால், நல்லவர். கனவில்கூட பிறருக்குத் தீங்கிழைக்க நினைக்காதவர்.

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் பழக்கம்தான் அவருக்கு உண்டு. பிறக்கு வைக்கும் பழக்கம் அவர் அறியாதது.

எடியூரப்பா கோபத்தில் புலம்புவதை விடுத்து கௌடாவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.

ஏழுநாள் முதல்வராக இருக்க அனுமதித்த கௌடா இன்னும் அரை நாள் அதை நீடித்திருந்தால்…

பதவி விலகும்போது ஏழரை விலகியது’, ‘ஏழரை ஒழிந்ததுஎன்றல்லவா எல்லோரும் சொல்லியிருப்பார்கள்?

 

-சமூக விழிப்புணர்வு

நரேந்திர மோடியின் முகமூடியைக் கிழித்து விட்டதே தெகல்கா’?சாட்டை

d_05psd.jpg

மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் முன்பே போட்டுடைத்த உண்மைகளுக்கு  இப்போது ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியிருக்கிறது தெகல்கா’.

நடிகைகளின் வீட்டுக் கழிப்பறையில் விழும் ஆணுறைகள் யாருக்கானது எனப் புலனாயும் நம்ம ஊரு ஜூவி’, ‘ரிப்போர்ட்டர்களின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது.

அம்பலப்பட்டுப் போன மோடியும், பா.ச.க.வும் ஆழ்ந்த மௌனத்தில்…. 

அந்த மவுனத்திற்கேனும் ஓர் அர்த்தமிருக்கிறது.

கலைஞரும், ஜெயலலிதாவும் மோடி விசயத்தில் காக்கும் மௌனத்திற்கு?

அரசியல் இருக்கிறது.

ஒருவர் மோடியின் பதவியேற்புக்குப் போய் வந்தவர்.

இன்னொருவரோ அவர் பதவி பறிப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கேடயமாக நின்றவர்.

ராமர் படம் போட்ட டாலர்தான் என்னை வேல் கம்பு தாக்குதலிலிருந்து காப்பாற்றியதுஎன்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சொல்கிறாரே…

 சாட்டை

d_02psd.jpg 

ராமன் மட்டுமல்ல,

ராமனைச் செருப்பாலடித்த பெரியார் படம் போட்ட டாலரும் காப்பாற்றும்.

கிருஷ்ணசாமிக்குச் சந்தேகமிருந்தால் பெரியார் டாலரை அவர் கழுத்தில் மாட்டி விடுகிறோம். அதை தொங்க விட்டுக்கொண்டு முதுகுளத்தூர் பகுதிக்குள் மீண்டும் ஒரு ரவுண்டு போய் சோதித்துக் கொள்ளலாம்.

தலைக்கு டை அடித்தால்தான் உங்களோடு வெளியே வருவோம் என்று ரஜினியின் பெண்கள் கூறிவிட்டார்களாமே…

சாட்டை

d_07psd.jpg 

சேதி ரொம்பப் பழசு.

இனி டை அடிக்கிறியோ, அடிக்காமப் போறீயோ… வாயில் ஒரு திண்டுக்கல் பூட்டைப் போட்டு, சாவியை எங்காவது கடாசிட்டு வந்தால்தான் கூட வருவோம்என்று புத்திரிகள் சொல்லி விட்டார்களாம்.

காரணம்,

தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாகப் பாய்ந்து  கலைஞர் அடித்த ஆப்பு! 

கதாநாயகன் வில்லனாவது காலத்தின் கட்டாயம்.

காமடியன் ஆவது…

காலக்கொடுமை!

முழுநேர குடிகாரனும், பகுதி நேர உளறுவாயனுமான ரஜினிக்கு இது விசயத்தில் மூளையாகச் செயல்பட்ட சோவானவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.

சமூக விழிப்புணர்வு

தமிழ் படித்த ஓர் ஆசிரியர் வெறும் ரெண்டாயிரம் மட்டுமே சம்பளமாக வாங்க, கம்ப்யூட்டர் படித்து கால்சென்டரில் வேலை பார்ப்பவன் இருபதாயிரம், முப்பதாயிரம் வாங்குவது என்ன நியாயம்?

சாட்டை 

 d_01psd.jpg

நியாயமில்லைதான்.

ஆனால்,

கண்டக்டர் வேலைக்கு லாயக்கில்லையென துரத்தப்பட்டவனுக்கு இருபது கோடி…

காலேஜை கட் அடித்து கஞ்சா குடித்துக் கொண்டிருந்தவன் ஏழு கோடி…

கவரிங் கடையில் உட்கார்ந்து வளையல் போட்டவன் ஒரு கோடி…

வாங்குவது கோடம்பாக்கத்தில்.

கால் சென்டரில் வேலை பார்ப்பவனை காரிலிருந்து இழுத்துப் போட்டு அடிக்கலாமென்றால் (நன்றி : கற்றது தமிழ்) இந்தக் கோடம்பாக்கத்துக் கூத்தாடிகளை வூடு பூந்து உதைத்திருக்க வேண்டுமே?

என்ன செய்வது?

அடுத்தப் படத்திற்கு (அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால்) கதை சொல்ல இயக்குநர் அங்குதானே போய் நிற்க வேண்டும்!

அவருடைய தர்மசங்கடம் நமக்குப் புரிகிறது.

ஆனால், அவருக்குப் புரியாத சேதி ஒன்றுண்டு.

ஆல்பர் காம்யூ, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  படித்தால் தாடி வளர்க்கலாம், மோட்டு வளையைப் பார்த்து போஸ்கொடுக்கலாம். சுற்றி நிற்கும் அள்ளக் கைகளிடமிருந்துஅறிவுஜீவிபட்டம்கூட வாங்கலாம்.

படைப்பாளிஎன்ற பட்டத்தை மட்டும் கடைசிவரை  வாங்க முடியாது மக்களிடமிருந்து.

-சமூக விழிப்புணர்வு

ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் சொல்கிறார்களே…

சாட்டை

 d_04psd.jpg

பரிதாபத்துக்குரியவர்கள் காங்கிரசுக்காரர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவை நம்ம ஆறுதலும், தேறுதலும்தான்.

மொதல்ல ஜெயந்தி மேடத்துக்கு ஆறுதல்!

பாவத்தின் சம்பளம் மரணம்.

சொல்வது பைபிள்.

சோனியா ஒரு கிறிஸ்டியன்.

அதிலும் இத்தாலியிலிருந்து வந்த ட்ரூகிறிஸ்டியன்.

சம்பளத்தோட சேர்த்து போனசும் வந்துடப் போவுதுன்னு அந்தம்மா மறந்திடுச்சு, மன்னிச்சிடுச்சு.

கட்ன சம்சாரமே கமுக்கமா இருக்குறப்போ, இது ஏன் லபோ, திபோன்னு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்குது?”

சத்தியமா நாம கேக்கப் போறதில்ல. ஊரு உலகத்துல உள்ளவங்க கேப்பாங்க.

நரம்பில்லாத நாக்கு, நாலுவிதமாகப் பேசத்தான் செய்யும். அம்மணிதான் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கிக்கணும்.

d_03psd.jpg 

அடுத்து, வாசன் வகையறாக்களுக்கு தேறுதல்.

சத்தியமூர்த்தி பவனிலிருந்து வேட்டி கிழியாம, டங்குவார் அறுந்து தொங்காம எப்படியோ தப்பி வெளியே வந்துவிடும் சாதுரியத்துக்கு மொதல்ல ஒரு சலாம் வாசன்ஜி. 

புலிகளின் படுபாதகச் செயலை மறக்க முடியாம தினமும் நீங்க பாய்ல பொரண்டு பொரண்டு படுக்குறதக் கேட்டா நமக்கும் தூக்கம் வரமாட்டேங்குது.

ரெண்டு கிலோ புளுத்த அரிசிக்காக ராப்பகலா ரேஷன் கடை வாசல்ல படுக்க வச்சி வருசம் நாப்பது ஆச்சு. அத இன்னும் மறக்காம நீங்க இருக்கலாம், நாங்க மட்டும் மறந்துடணுமா?”ன்னு எதிர்கேள்வி போடுறது எங்களுக்குப் புரியாம இல்ல.

எங்க கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.

என்னதான் காங்கிரசுக்காரனா இருந்தாலும் தமிழனாச்சே என்ற பாசத்துல சொல்லி வைக்கிறோம்.

ராஜீவுக்காக புலிகளை மறக்க முடியலைன்னு இங்கே சொல்ற மாதிரி, இந்திரா படுகொலைக்காக சீக்கியர்களை மறக்க முடியாதுன்னு பஞ்சாப்பில போய் சொல்லி வைக்காதீங்க.

தலப்பா கட்டுங்கஅடிக்குற அடியில புத்தூர் கட்டு போடுற மாதிரியாயிடும்.

ஜாக்கிரதை!

-சமூக விழிப்புணர்வு