r_indian_left.jpg

கடவுள் இல்லை என்று சொல்கிறோமே… திடீர்னு கடவுள் வந்துட்டா என்ன அய்யா பண்றது?” 

இருக்கிறாருன்னு சொல்லிட்டுப் போவோம். 

தந்தை பெரியாருக்கும், சாதாரணத் தொண்டர் ஒருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது. 

ஒருவேளை, அந்த அப்பாவித் தொண்டருக்குப் பதில் இன்னொருவர்,

அதாவது கொஞ்சம் வெவரமானவரு…

நாலு உலக விசயம் தெரிஞ்சு வச்சிருக்கிறவரு…

வேற யாரு… நம்ம சி.பி.எம்.முதான்…

அதே கேள்வியைக் கேட்டிருந்தால்?

அதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பெரியார். 

ஆனா, சி.பி.எம்முங்க வெவரமானவங்க மட்டுமில்லையே, கொஞ்சம் வெவகாரமானவங்களுமாச்சே… 

தெருக்கூத்துல சாமி வேசம் கட்டி ஆடுறவன் எவனையாவது பிடிச்சுக் கொண்டாந்து இதோ கடவுள்! இப்ப இருக்கிறாருன்னு சொல்லுஎன்று தர்ணா நடத்தியிருப்பார்கள். 

கற்பனை கொஞ்சம் அதிகம்தான் என்பவர்கள் சேலம் கோட்டப் பிரச்சனை சமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டது என்ற தோழரின் பச்சைக் புளுகை மீண்டுமொருமுறை படித்துக் கொள்ளலாம்.

எப்படித் தீர்த்தார்கள்? 

மதுரை கேட்டத்தில் இருந்த பொள்ளாச்சியையும், கிணத்துக்கடவு உள்பட 79 கி.மீ. பகுதிகளையும் சேட்டன்மார்களுக்குக் கைமாற்றி விட்டு, கோவை, திருப்பூரை மீட்டார்கள்.

 மொழி வழி மாநிலங்கள் போல், மொழி வழி கோட்டம் கேட்டு மட்டுமல்ல, இந்தப் போராட்டம்! கோவை பகுதிகளிலிருந்து பெற்ற வருமானத்தில் பாலக்காட்டின் தொப்பை மட்டும் தனியாக வளர்ந்ததால் வந்த வயிற்றெரிச்சலில் எழுந்ததுதான் சேலம் கோட்டச் சிந்தனை. 

ஆனால், வயித்து வலியை சரிசெய்த மருத்துவன் கிட்னியைத் திருடிக் கொண்ட கதைபோல, கோவையை மீட்க நடந்த போரில் பொள்ளாச்சியைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.

பாலக்காடுடன் இருந்ததால் தமிழர் பகுதிகள் வளர்ச்சியடையாமல் போனது உண்மை. அந்த உண்மை பொள்ளாச்சிக்கும் பொருந்தும்தானே!

கோவை வாழ, பொள்ளாச்சி மட்டும் நாசமாகப் போக வேண்டுமா? 

இது என்ன சுமூகத் தீர்வு?

வெங்காயம்!

சரி,

 உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல் கேட்கிறேன்.

 இதையே ஒரு நல்ல தீர்வாக எடுத்துக் கொண்டால்கூட தமிழக சி.பி.எம். கிளை இதற்காகச் செய்ததென்ன?

பட்டியல் போடுங்கள்.

கிடுகிடு போராட்டம், மறியல்…

 ம்ஹீம்… அதெல்லாம் அசல் மார்க்சிஸ்டுகளுக்கு.

நீங்கள் காந்தியிஸ்டுகள்.

குறைந்தபட்சம், அச்சுதானந்தனின் முகத்திலறைகிற மாதிரி ஏதேனும் அறிக்கை?

சகோதர பாசம் கெட்டுவிடக்கூடாதுஎன்று வேண்டுகோள் விட்டீர்கள்.

அதுவும் அச்சுவுக்கு அல்ல, பாதிக்கப்பட்ட நமக்கு.

இந்த லட்சத்தில் மார்க்சிஸ்டுகள் கேரள நலனைப் பலிகொடுத்து விடுவார்கள்என்று கேரளாவில் இவர்களைப் பார்த்து வசைமாரி பொழிகிறார்களாம்… 

cpi.jpg 

காம்ப்ளிமென்டரி காப்பியாக ஆபீசுக்கு வரும் தேசாபிமானி, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசிஇதழ்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் உளறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

 கேரள மக்களை இவ்வளவு மட்டமாக எடை போடாதீர் தோழரே…

போக்குவரத்தில், வேலைவாய்ப்பில், உணவுத் தேவையில் தமிழகத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும் நாம் இவற்றையெல்லாம் இழப்பாகக் கருதக்கூடாதுஎன்று பல எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அச்சுதானந்தன் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் தமிழர்கள் அல்ல, மலையாளிகள்தான்.

இன்னொரு உண்மை அவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் இல்லை.

ஆபாசத்தைக் கடைவிரிக்கும் சினிமா வியாபாரி மக்களின் ரசனைமேல் பழியைப் போட்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்வதுபோல் இருக்கிறது கேரள சி.பி.எம்.முக்கு நீங்கள் வாங்கும் வக்காலத்து.

கேரள மக்களுக்கு வெறியேற்ற முயற்சிப்பதுதான்  சி.பி.எம்.மின் சமீபகால அரசியலே.  

ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கை மிஞ்சும் அளவுக்கு கிராபிக்சில் கலக்கிய முல்லைப் பெரியாறு அணை உடைப்பு சி.டி. ஒளிபரப்பு மக்களுக்கு சி.பி.எம். நடத்திய சித்தாந்த பாடமில்லை.

பச்சையான இனவெறி அரசியல்.

பாலக்காட்டிலிருக்கும் தண்டவாளங்களையெல்லாம் ராவோடு ராவாக பெயர்த்தெடுத்து, இரயில் பெட்டிகளை லாரியில் ஏற்றி சேலம் கொண்டு போவதுபோல் அடுத்து ஒரு கிராபிக்ஸ் தயாரிக்காமல் இருந்தால் சரி.

மக்கள் முன்னால் மக்கள் பிரதிநிதிகள் நிற்க வேண்டும்தான்; பதில் சொல்ல வேண்டும்தான்.அதற்காக மக்கள் போக்கிலே போய்விட முடியாது.

கம்யூனிஸ்டுஎன்று பெயர் வைத்து கட்சி நடத்துகிறவர்கள் நிச்சயம் அப்படி நடந்துகொள்ள கூடாது.

மக்கள் அவர்கள் விருப்பப்படி வாழ நாம் அனுமதிக்க முடியாதுஎன மாமேதை லெனின் எழுதியதை மறந்துவிட வேண்டாம்.

மக்கள் முன் நிற்கும் அந்தக் கடமைதான் முதன்மையானது என்றால் இங்கேயிருந்தும் இரண்டு பேர் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் போயிருக்கிறார்களே…

அவர்களுக்கு?

இல்லை, அடுத்து வரும் தேர்தல்களில் மோகன் பாலக்காட்டிலும், பெல்லார்மின் ஒத்தப்பாலத்திலும் நிற்கப் போகிறார்களா?

உங்கள் அணுசக்தி சமாச்சாரம் குறித்து தனி கட்டுரையே எழுத வேண்டும். அதை இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக ஒரு சந்தேகம்.

டாடாகொடுத்த காசை திருப்பி அனுப்பிவிட்டீர்கள்.

ரொம்ப நல்லது.

திருட்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் கொடுத்த மாமூலை?(உங்கள் கணக்கில் அதற்குப் பெயர் நன்கொடை)

 கல்லாவில் வாங்கிப் போட்டார்களா,

 அல்லது கண்ணெடுத்தும் பாரோம்என்று டாடாவுக்கு அனுப்பியதுபோல் திருப்பியனுப்பினார்களா?

தயவுசெய்து அச்சுதானந்தனிடம் கேட்டு விட வேண்டாம்.

தேசாபிமானி மேலாளரை கைகாட்டி விடுவார் அவர்.

கோத்ரெஜ் பீரோ மாதிரி ஏதோ ஒரு பீரோ வைத்திருக்கிறீர்களே… என்ன அது?

ம்… பொலிட்பீரோ?

அந்தப் பீரோவில் உள்ளவர்களிடம் கேட்டு தகவல் சொல்லுங்கள்.

மற்றவை விழிப்புணர்வு வழியாக…                                  

தீசுமாசு டி செல்வா