kb
இயக்குனர் பள்ளம்.

“வடக்கால இருக்குற வாசப்படியை அப்பிடியே அலாக்காத் தூக்கி தெக்கால மாத்தி வச்சாப் போதும்….. அடுத்த அம்பானி நீதான்” என  டுபாக்கூர் விடும் வாஸ்து நிபுணன்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை நமது மகாகனம் பொருந்திய மாட்சிமிகு நீதியரசர்கள்.

சமீபத்தில் இந்த நீதிமான்கள் ‘மடிசார் மாமி மதன மாமா’ பஞ்சாயத்தில் எடுத்து வைத்த கருத்துக்கள் கர்த்தரின் மலைப்பிரசங்கத்தையே தோற்கடித்துவிடக்கூடியவை.

கடந்த ரெண்டு மணி நேர இருட்டு ஆட்சியில் ‘அய்யன்’ கருணாநிதி தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கென அறிவித்தார். ஒரு பொம்பளைப் பொறுக்கியின் சுயசரிதையை கிளுகிளுப்பேற்றிச் சொன்ன ‘நான் அவன் இல்லை’, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும், சங்கப் பரிவாரங்களைத் தேசபக்தர்களாகவும் சித்தரித்த  ‘உன்னைப் போல் ஒருவன்’ போன்றவையெல்லாம் வரிவிலக்குப் பெற்று கல்லா கட்டின. ‘மாமனாரின் இன்பவெறி’, ‘அஞ்சரைக்குள்ள வண்டி’ படங்களெல்லாம் ரொம்ப நாளுக்கு முன்பே வந்துபோய்விட்டதால்,  நல்ல தமிழ்ப் பெயர் இருந்தும் வரிவிலக்குப் பெறும் பாக்கியம் இழந்தன.

அன்று ‘அய்யன்’ கருணாநிதி செய்ததை நையாண்டி செய்தவர்கள், இன்று மாண்புமிகு நீதிமான்கள் வழங்கிய தீர்ப்பை உச்சி முகர்ந்து வரவேற்பது வேடிக்கையாக அல்ல, வினோதமாக இருக்கிறது.

பணமா பாசமா, எதிர்நீச்சல், அன்புக் கரங்கள், பாசமலர்,தாய் சொல்லைத் தட்டாதே என்றெல்லாம்  கண்ணியமான தலைப்புகளில் 24 காரட் பரிசுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் வந்து தமிழர்களின் கலாச்சாரம் கெட்டுப்போகாமல் காத்து வந்ததாகத் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.

உண்மைதானா அது?

“ஆசைப்பட்டதை அடைவதற்காக சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகள், குற்றச்செயல்கள், ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் போன்றவற்றைச் செய்வது தவறானதல்ல என்பது போன்ற கருத்துக்களை சினிமாக்கள் கூறுகின்றன. இது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.”

poster-big

இப்படிச் சொல்லிய நீதிதேவன்கள் மதன மாமாவை வெட்டி விட்டு, மடிசார் மாமியை அனுமதித்திருக்கிறார்கள். அதாவது ஆபாசம் தலைப்பில் மட்டும்தான்.   இதன்மூலம் அவர்கள் கருத்தை அவர்களே மறுக்கும் விநோதம் ஒருபுறம்;  ‘போக்கிரி’, ‘மங்காத்தா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பொறுக்கித்தனமான பெயர்களை என்கவுண்டரில் போய்ச் சேர்ந்த வீரமணி, ஆசைத்தம்பி, கபிலன் போன்ற தமிழ் ரௌடிகளின்  பெயர்களாக மாற்றிவிட்டால் குழந்தை குட்டிகளோடு உட்காந்து பார்க்கலாம் என்று பொழிப்புரை இன்னொருபுறம். உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் உருவத்தைக் கொண்டாடுகிறார்களே பின் நவீனத்துவவாதிகள்….. அவர்களைப் போல.

சுருக்கமாகச் சொன்னால் வாய்க்குள்ளாற போறது நரகலாயிருந்தாலும் அத வச்சித் திங்குற பாத்திரம் மட்டும்  நல்ல பளபளப்பா, ‘விம்’ பவுடரப் போட்டுத் தொலக்கியிருக்கோணும்.

சில வருடங்களுக்கு முன் தணிக்கை செய்ய இலட்சக்கணக்கில் கையூட்டுப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார் ஒரு தணிக்கை அதிகாரி.

ஒரு படத்துக்கான செலவில் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு எழுதப்படும் மொய்க் கணக்கை பிரபல இயக்குநரே பகிரங்கப்படுத்தினார்.

இப்படி ஒரு களவாணிக் கும்பல் கண்ணெதிரே ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்க ”தணிக்கைத் துறையின் செயல்பாடுகளில் சந்தேகம் வருகிறது” என எதுவுமே தெரியாத அப்பாவி செந்தில் போல் முகத்தை வைத்துக்கொண்டு அங்கலாய்க்கிறார்கள் நீதிதேவன்கள். என்ன கெரகமடா இது…?

“மனித உறவுகள், குடும்பத்தின் மதிப்பு, மூத்தவர்களை மதித்தல், சகோதர பாசம், தேசிய ஒற்றுமை போன்றவை பற்றிய கருத்துக்களை மனசாட்சியோடு அந்தக் காலப் படங்கள் வெளியிட்டன.”

இந்த நீதிமன்றப் பெருசுகள் விடும் பெருமூச்சில் எத்தனை விழுக்காடு உண்மை?தமிழ்ச் சினிமா இப்பதான் இப்படி நாறிப்போய் விட்டதா..?

எட்டி உதைத்தாலும் சுற்றிச் சுற்றி வரும் நாய்க்குட்டியாய் விசுவாசம் காட்டும் உறவு நிச்சயம் குடும்ப உறவாய் இருக்க முடியாது. அடிமைகள்- ஆண்டை உறவாகத்தான் இருக்கமுடியும். துளியும் சனநாயகமற்ற இந்த ஆணாதிக்க, பண்ணை மனோபாவம் கொண்ட பாத்திரங்களைத்தான் பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றோர் நெஞ்சுருக ரீல் ரீலாக ஓட்டிக் காட்டினார்கள்.

அறுத்துக் கட்டுதல், விதவை மறுமணம் போன்றவை தென் மாவட்டத் தமிழர்களிடம் இயல்பான ஒன்றாக இருந்தபோது கணவனை இழந்த பெண்ணை மூளியாக்கி வீட்டுக்குள் முடக்கும் பார்ப்பனியக் கருத்தியலை தமிழர்களின் பண்பாடாக நீடிப்புச் செய்தார்கள். காட்சிகள் மூலமே கதையை நகர்த்திச் செல்லும் புதிய உத்தி கண்டுபிடித்த ஸ்ரீதர் கூட இதற்கு விதிவிலக்கில்லை.

‘பாசமலர்’ காட்டும் சகோதர பாசம் இப்போது இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ….அந்த அளவுக்கு உண்மை அது அப்போதும் இல்லை என்பது.

இப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் சிவாஜியாக வடிவேலுவும், சாவித்திரியாக கோவை சரளாவும் நடிக்குமளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தாத கோமாளிப் படைப்புகள் அவை.

“குற்றங்களைச் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தண்டனை பெறாமல் எளிதாகத் தப்பிவிடுவதுபோல் காட்டுவது இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறது.”

இந்தப் பொன்னான வரிகள் மங்காத்தாவுக்கும், பில்லாவுக்கும், போக்கிரிக்கும் மட்டும்தானா யுவர் ஹானர்?

அப்பனும், மகனும் சேர்ந்து கூட்டுக் களவாணிகளாக கண்ணில் படும் பெண்களையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் பாலியல் வல்லுறவு நிகழ்த்தும் படத்தின் பெயர் ‘எங்க ஊர் கண்ணகி’. சுத்தத் தமிழ்ப் பெயர். படம் வந்து கிட்டத்தட்ட வருடம் 25 கடந்துவிட்டது.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்’களைப் பயன்படுத்தி தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் ‘வளைக்கும்’ வக்கிரப் பாத்திரப் படைப்பைக் கொண்டது சுத்த சுயம்புவான தமிழ்ப் பெயர் கொண்ட ‘அவள் ஒரு தொடர்கதை’  (ஜெ.கே.யின் புத்தகங்கள் இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு ரொம்ப நல்லாவே பயன்படும்).இப்படம் வெளியாகி  ஆகிவிட்டது 40 வருடங்கள்.

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு பெண்ணின் உடம்பை நிர்வாணமாக ரசிக்க வைத்த படத்தின் பெயர் ‘நெற்றிக்கண்’. எந்தக் கண் தெரியுமா? “உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரனை எரித்துப் பொசுக்கி பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்திய முக்கண்ணனாம் சிவனின் நெற்றிக்கண். இதற்கும் வயது 25.

மகள் ஐம்பதைக் கடந்த ஒரு அரைக்கிழடை விரும்ப, அவள் தாயோ அந்த ஐம்பதின் புத்திரனான இருபது வயது இளைஞனிடம் மையல் கொள்கிறாள். இது ‘அபூர்வராகங்கள்’.

Avaloruthodar

16 வயதுப் பெண்ணை 25 வயது இளைஞன் விரும்ப, அவளோ அந்த 25ன் 60 வயது அப்பனுக்கு மனைவியாகி காதலித்தவனை “மகனே” என அழைத்து நக்கல் பண்ணுகிறாள். இது ‘மூன்று முடிச்சு.’

இந்த இரண்டு வக்கிரங்களுக்கும் வயது 40க்கும் மேல்.

இவையெல்லாம் ‘பால்கே’ விருது பெற்ற பாலச்சந்தர் நல்ல தமிழ்ப் பெயர்களில் நமக்கு வழங்கிய நாலாந்தரக் கழிசடைகள்.

இந்த வக்கிரம் பிடித்த நாயகர்கள்-நாயகிகளுக்கு அதன் படைப்பாளிகள் படம் முடியும் நேரத்தில் என்ன தண்டனை அளித்தார்கள் என்பதை மாண்புமிகுக்களின் மனசாட்சியே அறியும்.

பாலியல் வல்லுறவு செய்தவனுக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வைப்பதையே அவனுக்கான தண்டனை என்று நம்மை நம்ப வைத்த அந்தக் காலத்துப் படங்களைவிட, அவன் ஆண்மையை அறுத்தெறிவதைத் தண்டனைத் தீர்ப்பாகச் சொன்ன இன்றைய சில படங்கள் கொஞ்சம் முற்போக்குதான்.

இன்னும் தமிழுக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான, தமிழ்வழிக் கல்விக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட- சிறுபான்மையினருக்கு எதிரான, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான  படங்களெல்லாம் சினிமா பேச ஆரம்பித்தபோதே வர ஆரம்பித்துவிட்டன.

ஒரு பொம்மைக்காக  வயதான பாட்டியைக் கொலை செய்த சிறுவன்,

ஒரு செல்போனுக்காக கூடவே விளையாடிகொண்டிருந்த சிறுவனை மறைவான இடத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் கொன்ற சிறுவர்கள்,

பிளாக்பெர்ரி, ஐபோன், பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றவற்றிற்காக வழிப்பறியில் இறங்கும் மாணவர்கள்…

இவர்களுக்கெல்லாம் குற்றங்களைக் கற்றுக் கொடுக்கும்  குருகுலமாகத் திகழ்ந்தது தமிழ் சினிமா. ஆனால் குற்றச்சூழலை உருவாக்குகிறது நமது சமூகம்.குடிமக்களை நுகர்வோராக மாற்றிய உலகமயத்தால் கடற்கரையிலிருந்து மீனவர்களும், காடுகளிலிருந்து  பழங்குடிகளும், விவசாயிகளும் நகர்ப்புறங்களுக்குத் துரத்தப்பட்டு உதிரித் தொழிலாளிகளாக உருவெடுக்கிறார்கள். இருப்பவனிடமிருந்து அடித்துப் பிடுங்கும் சினிமா நாயகர்களை  இவர்கள் ஒரு கொண்டாட்ட  மனநிலையுடனே பார்ப்பார்கள்.

“தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று ஊழலை நியாயப்படுத்தியவர்களும், 2ஜி யில் ஒரு இலட்சத்து  எழுபத்தாறாயிரம் கோடி ஆட்டயப் போட்டவர்களும்,மணல் மாபியாக்களும், கிரானைட் கேடிகளும் இன்று தயாரிப்பாளர்கள்.

அண்டா குண்டானை வித்தும், ஆத்தாளின் தாலியை  அடகுவைத்தும் கல்வித்தந்தைகளின் காலடியில் நன்கொடையாகக் கொட்டிப் படித்தவர்கள் இயக்குநர்கள்.  இவர்களின் கூட்டு முயற்சியில் மாடர்ன் டைம்சும், பொடம்கின் போர்க்கப்பலுமா வெளிவரும்?

மீறி முயற்சிப்பவர்கள் கோடம்பாக்கத்திலிருந்துத் துரத்தப்படுவார்கள். கொள்கை கோட்பாடு என்று பேசுபவர்களோ ‘அக்ரகாரத்தில் கழுதை‘எடுத்த ஜான் ஆபிரகாமைப் போல் படத்தை எடுத்து  ஊர் ஊராகக் காட்டி துண்டேந்த வேண்டியதுதான்.

‘‘சமூக விழிப்புணர்வு’ இதழில் தீசுமாசு டி செல்வா எழுதி வெளிவந்த கட்டுரைகள், அதன் எதிர்வினைகள் (நாகரீகம் கருதி பிரசுரிக்க தகுந்தவை மட்டும்) தொகுக்கப்பட்டு ‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’ எனும் தலைப்பில் இப்போது புத்தகமாக ……
வெளியீடு
சமூக விழிப்புணர்வு பதிப்பகம்
68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை & 600 018.
தொலைபேசி
94885 76166
விலை : 45/–

உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

gnani

 

 

 

 

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்காரன்.

ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.

இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.

இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.

காலம் கடந்த போதனை.

சரி, அது போய் தொலையட்டும்;

பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில்“இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?

பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!

ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே.

அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!

என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!

சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ… ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

 

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

cna

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே…?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது.

கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

karuna fast

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்).

அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

suruli

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்… போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும்.

கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார். ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்… நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம்.

சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே…

offer1

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு.பெரிய தில்லாலங்கிடி!

அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும்.

இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது.

அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம்.

‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள்.

சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை.

தேவை ஒரேயொரு கணினி.

‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’…

அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும்.

‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன… அடையாறு பார்க் என்ன… என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

vadivelu-winner

  கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு… ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள.

secretary-general-ban-ki-moon

அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே… அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே…. ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு!துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே…

ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்… இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே!

gandi

ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை.

சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது… போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது.

போராளிகளுக்கு சரிப்படாது.

 

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

sonikaruna

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

மனோகரா’ கதை இது.

ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை.

அப்பன் புருசோத்தமன் என்ன… மகன் மனோகரனே மாட்டிக்கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது.

 விடுவாரா புருசோத்தமன்!

ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு.

புகுந்து விளையாடிவிட்டார்.

 ‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

 ‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

the demon

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை.

புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

 தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான்.

தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

INDIA/

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது.

அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது :

‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.


image0041

‘அன்னை’க்குப் பாடம் புகட்ட ‘அம்மா’வுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்களே…. 

தேர்தல் முடிஞ்ச பிறகு ‘அம்மா’ நடத்தப் போகும் பாடத்தை கைகட்டி, வாய் பொத்திக் கேட்கச் செவியுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள் தாராளமாக அம்மாவுக்கு ஓட்டுப் போடலாம்.

பழசை மறந்தவர்கள் பாடம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள தா. பாண்டியன், வரதராஜன் போன்ற காம்ரேடுகளை அணுக வேண்டும். தற்சமயம் சீட்டுக்காகப் போயஸ் கார்டன் வாசலில் ராப்பகலாய் அவர்கள் படுத்துக் கிடப்பதால் கட்சி அலுவலகத்தில் சந்திக்க இயலாது. ஒரு வாரமோ – பத்து நாளோ பொறுத்தபின் முயற்சிக்கவும்.

காங்கிரஸ் கூட்டணிக்குப் போன திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பேசுவார்?

இலங்கையின் இறையாண்மை குறித்து கண்ணீர் விடும் இந்தியா, சீனாவின் இறையாண்மை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதற்காக தலாய் லாமாவுக்கு தினமும் கிடா வெட்டு விருந்து வைப்பதை ஆதாரங்களுடன் மேடைதோறும் அம்பலப்படுத்துவார்.

அய்ரோப்பிய ஓடுகாலி என்.ஆர்.ஐ.களின் மயிரைப் பிடுங்குற டர்பன் மேட்டருக்காக, எந்திரிக்க முடியாத நிலையிலும் சர்கோசியைப் பார்த்து பிராது கொடுத்த மன்மோகனை சந்திக்கிழுத்து வசை பாடுவார்.

காங்கிரசுக்காரன் கடுப்பாகி, கட்டையைத் தூக்கிக் குறுக்கே போட்டால் அப்படியே குப்புறப்படுத்துக் கொள்வார். சிறுத்தை பயந்து புதருக்குள்ளே ஓடி பதுங்கி விட்டது என நாம் அவதூறு சொல்லக்கூடாது. 67 இல் காமராசர் சொன்ன ‘படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ திட்டமாகவும்  இருக்கக்கூடும்.

 

‘சேலை கட்டிய முசோலினி சோனியா’ என்பது இறையாண்மைக்கு எப்படி எதிராகும்?

கற்பு, ஒழுக்கம் இவைகளை பெண்களின் சேலைக்குள் ஒளித்து வைத்திருப்பதுதான் நம்ம ‘கலாச்சாரமே!’ தேசத்தை ஒரு பெண்ணாக உருவகிப்பதால் இறையாண்மையும் அங்குதான் இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கையால்தான் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பாரத மாதாவைத் தேடினார் நம் தமிழினத் தலைவர் ஒருவர்.

இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்களில் ஒருவர் ஒரு காலத்தில்  அத்தலைவரின் சீடகோடியாக இருந்தவரல்லவா! சகவாச தோஷத்தால் இந்திய இறையாண்மையை சோனியாவின் சேலைக்குள் தேடிவிட்டார்கள்…

கறுப்பைக் கரைத்து காவியாக்கினார் அம்மா. கதராக்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

“கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும்” என ரெட்டைக்குழல் துப்பாக்கியாய் முழங்கிய தங்கபாலுவும், ஜெயலலிதாவும் ஏன் வேறு வேறு கூட்டணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்?

இந்துத்துவா, மதமாற்றத் தடைச்சட்டம், பார்ப்பனியத் திமிர் அனைத்திலும் ஒத்த கருத்தும், ஒரே செயல்பாடும் கொண்ட சங்கராச்சாரி ஜெயேந்திரனும், ஜெயலலிதாவும் எதிரெதிர் முகாம்களில்தானே உள்ளனர்!

அஜெண்டாவில் என்ன பின்னடைவு ஏற்பட்டு விட்டது?

எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு – இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல். 

தேர்தல் நம்ம உள்ளூர் பிரச்சனை. அதைக் கணக்கில் கொண்டால் இலவச கலர் டி.வியும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் கொடுத்த கலைஞருக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது?

தாராளமாகப் போடலாம்.

எண்சாண் உடம்புக்கும் பிரதானம் சிரசு அல்ல; வயிறுதான் என்பதை ஒத்துக்கொண்டால்!

செருப்பாலடிச்சாலும் வாய்க்கு ருசியா கறியும் சோறும் ஆக்கிப் போட்டாரே ஆண்டை…!  அடிமையா தொடர்வதில் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பும் பண்ணையடிமைகளின் விசுவாசத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிறுத்துப் பார்க்கக் கொடுக்கப்படும்  வாய்ப்புதான் தேர்தலென்றால் இது மிகச் சரியே!

கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி வைத்திருக்கிறாராமே விஜயகாந்த்?

kaptanu

கடவுளோடு கூட்டணி வைக்க சிதம்பரம் நடராசன் கோயிலுக்குப் போயிருந்தால் நேரடியாக கடவுளுக்கும் – கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடிச்சுக் கொடுத்திருப்பார்கள் தீட்சிதர்கள். டெல்லிக்குப்போய் காங்கிரசுக்காரன் காலில் ஏன் விழுந்து எழுந்தார்? 

சிதம்பரம் போனால் தட்சணை கொடுக்கணும், டெல்லியில் வாங்கலாம் என்பதால் இருக்குமோ!

தமிழீழ ஆதரவாளர்களை கள்ளத் தோணியில் போய் போர் செய்யச்  சொல்கிறாரே முதல்வர்?

இவர் பேச்சை நம்பி கள்ளத் தோணியில் ஏறி படையெடுத்துப் போய் பாளையம் இறங்கும் நம்ம ஆட்கள் அங்கே ராஜபக்சேவின் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்டால் பிரச்சனையில்லை. ‘அன்னை’ திருட்டுத்தனமாக அனுப்பி வைத்திருக்கும் இந்தியக் கூலிப் படையோடு மோத நேர்ந்தால்…!

சகோதர யுத்தம் அல்லது பங்காளி யுத்தம் வந்து விடுமே! தமிழினத் தலைவருக்கு அது அலர்ஜி ஆச்சுதே!

 

கூட்டணியில் வைகோவுக்கு மட்டும் ஏனிந்த இழுத்தடிப்பு?

எடுக்கிறது பிச்சை; அதுல மொறப்பென்ன வேண்டிக்கிடக்கு?

“கடைசியா வந்தவனுக்கெல்லாம் சுடுசோறு; எங்களுக்கு வெறும் பழையதுதானா?” ன்னு அழுது அடம்பிடிக்காம நல்ல பிள்ளையா அம்மா போடுறத வாங்கிக்கணும். புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா… சீர்செனத்திய வாங்கிட்டு நடையைக் கட்டுனோமான்னு இருக்கணும், நம்ம ராமதாசு அய்யா மாதிரி. அத வுட்டுப்புட்டு போன தீவாளிக்குச் சீராட வந்த மருமக புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?

.
பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியது எதற்காக?

சத்தியமா ஈழத் தமிழர் பிரச்சனைக்காகத்தான்.

தட்டிக் கேட்காத மன்மோகன், தட்டிக் கொடுக்கும் பிரணாப், கள்ளத்தனமாக வழிநடத்தும் சோனியா, வாய்க்கொழுப்பெடுத்து திரியும் இளங்கோவன், சிதம்பரம்… கும்பலை எதிர்த்து அல்ல; பதவியைப் பறித்துவிடக்கூடாதென நாற்காலிக்குப் பின்னே பம்மிக் கொண்டிருக்கிறாரே… கருணாநிதி! அவரை எதிர்த்துதான் அணி மாறியிருக்கிறது பா.ம.க.

அதாவது,

புருசன் அடிச்சது தப்பில்லை; கொழுந்தன் சிரிச்சதுதான் பிரச்சனையாம்! ஈழப் பிரச்சனையில் அய்யா எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் லட்சணம் இப்படித்தான்.

எல்லோரும் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கும் பந்தயத்தில் கருணாநிதியை மட்டும் ஜட்டி போட்டுக்கொண்டு ஓடச் சொல்கிறார் தமிழ் குடிதாங்கி மருத்துவரய்யா.

தமிழ்ப் புத்தாண்டுக்குள் ஈழத் தமிழர்களின் கதையை முடித்துவிட ‘அன்னை’ உத்தரவிட்டிருக்கிறாராமே…?

‘மந்திரி குமாரி’ என்றொரு படம்.

கட்டிய மனையாளை மலையுச்சியில் தள்ளிக் கொலை செய்ய ‘வாராய் நீ வாராய்’ என பாடியபடியே கூட்டிச் செல்வான் கணவன் என்ற உறவு கொண்ட காதகன் ஒருவன். எதிர்பாராத திருப்பம் அங்கே. கொலைகாரனே கொலையாகிப் போவான்.

பதவிக்காலம் முழுக்க கடிதங்கள் வரைந்தே பிரச்சனைகளை தீர்த்துக் கட்டும் கலைஞர் இந்த  விசயத்தில் மட்டும் தனது வழியை மாற்றி, ஒரு காலத்தில் தான் வசனம் எழுதிய  மந்திரி குமாரி படப்பெட்டியை பார்சல் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம்.

வேடிக்கைக்காகச் சொல்லவில்லை.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை திசை திருப்பியதாம் அரிச்சந்திரா நாடகம்.

சோனியா காந்தியின் பாதையை ஏன் மாற்றாது மந்திரி குமாரி?

 

“போர் என்றால் அப்பாவி மக்கள் மேலும் குண்டுகள் விழத்தான் செய்யும்” என ராஜபக்சேவின் கொலைவெறிக்குப் பரணி பாடிய ‘அம்மா’ இன்று ஈழ ஆதரவுப் படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றிருப்பது காலம் செய்த கோலமா?

ஈராக்கிலும், ஆப்கானிலும் மிகப்பெரும் மனித உரிமை மீறலை நிகழ்த்தும் அமெரிக்கச் சண்டியரை ஈழப் பிரச்சனைக்குப் பஞ்சாயத்து பண்ண வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறவர்கள் ‘அம்மா’ தலைமையின் கீழ் அணி திரள்வதில் கேவலம் ஒன்றுமில்லை.

அதே வேளையில் ‘ஒரு மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்’ என ஒற்றை வரியில் ஐந்தாயிரம் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தி திமிர் கக்கிய ஒருவரின் கோரச் சாவுக்காக ஒரு இனத்தையே காவு வாங்கத் துடிக்கும் போக்கிரிக் கும்பலுக்கும், இந்தத் தள்ளாத வயதிலும் அவர்களைத் தோள்மேல் தூக்கிச் சுமப்பவருக்கும், ‘அம்மா’ ஏற்று நடிக்கும் புதிய பாத்திரத்தை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை.

.
‘காங்கிரசைத் தோற்கடிப்போம்’ வசனம் ‘ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவோம்’ என்பதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறது?

மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அதைச் சொல்கிறது.

எதிரிகளும், துரோகிகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக, ஒரே அணியில் கலந்து விட்டதால் இப்படிதான் சொல்ல முடியும்.

ஏனெனில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் பிள்ளையானும், கருணாவும்.

துரோகிகளாக இருந்தாலும் ‘நம்மாளு’ எனும் இன உணர்வுடன் நெருங்கலாம் என்றால் அங்கே ஒரு ராஜபக்சேவும் இருக்கிறார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று சிக்கித் தவிப்பவர்கள் ஈழ மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களும்தான்.

‘விடுதலையை வென்றெடுக்க’ தொடர்ந்து ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டும், ஓட்டுச் சீட்டையே ஆகச் சிறந்த ஆயுதமாகவும் முன்மொழிபவர்களுக்கு இந்தச் சிக்கல்  கண்டிப்பாக வந்தே தீரும்.

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?  tds10

‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம்.

சமஸ்கிருதத்தில் சப் – டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து நல்லா கல்லா கட்டியிருக்கலாம்.

 ‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?

naankadavulstills002776fq7

சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம்.

அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.

‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம்.

அவரும் நாத்திகராகி விடவில்லை. ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது.

பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் – பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.

 

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா – இழிவுபடுத்துகிறாரா?

naan-kadavul

 

சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்?

அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.

நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?

naan_kadavul

அறிய மாட்டான்.

மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான்.

ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் மூடி மறைப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.

முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்!

அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.

ஜெயமோகன் & பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை

tds_8

ளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.

வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்பதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே… ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.

naan-kadavul4-500x375

சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:

‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.

‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.

வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?

ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம்.

கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே… அவன்!

அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா?

நிச்சயம் வருவான்.

அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.

naan-kadavul-stills-012

ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் – சுஜாதா கூட்டணியிடமிருந்து உருவவில்லை.

அந்நியனுக்கு கருட புராணம்.

கடவுளுக்கு ஏழாவது உலகம்.

முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய…’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு?

நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க விட்டிருப்பவனுக்கு…?

1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே… யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன்.

அவனுக்கு என்ன தண்டனை?

போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டுக்குத் திரும்பி விடும் தூரம்தான்.

‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்… என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது!

agori

அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!

அவன் மட்டுமா…

நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்!

டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி…! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்…

ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி – அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்!

அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காத்தி தேசத்துப் புத்திரர்கள். அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் – அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்!

‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

 

‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள்.

அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் – ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்… நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்கும்.

ன்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு. –

‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’.

உண்மைதானா இது?

ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி – செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?

வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ…’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே… நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்…

பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே…

பிச்சைக்காரர்கள்!

‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!

கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் தலையில் ‘ணங்’ என ஓர் அடி அடிக்கும்.

ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.

உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா – ஜெ.மோ கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.

 

naan-kadavul-stills-030

இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்திற்கு கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.

பாலா – ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.

பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும்.

கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?

41

கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (என்ன எளவோ) செய்பவர்களாக… புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக…

பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக…

அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.

இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?

நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும்தான் அறியப்பட வேண்டும்.

சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?

திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார்.

“ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.

 

 

தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி.

எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார்.

எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?

வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார்.

 

naan_kadavul_movie_photos_28

படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

 

இப்போது சொல்லுங்கள்… இவர்களில் யார் உண்மையான படைப்பாளி?

 

tds_bala1

‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.

சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம்.

வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்? 

காங்கிரஸ் போனால் பா.ச.க. வந்து விடும் என்று மார்க்சிஸ்டுகள் சொல்கிறார்களே…

சாட்டை

இந்தப் பூச்சாண்டிக்குப் பதில் மார்க்சிஸ்டுகள் பின்லேடனைக் காட்டி புஷ்சை ஆதரிக்க வைக்கலாம். அந்தக் கேப்மாறித் தனத்திற்கு இந்த மொள்ளமாறித்தனம் எவ்வளவோ மேல்.

 

 

தேவையில்லாமல் எதுக்குப் பத்து அவதாரங்கள்?

 

 

து, சிவாஜியின் ஒன்பது அவதாரங்களை மிஞ்ச வேண்டும் என்ற சொந்த அரிப்பால் வந்த வினை.

 

கவியரசுகண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசுபட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது.

 

அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல்.

அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படிக் கப்பலேறியிருக்காது.

 

கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

 

 

பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!

இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு.

 

கிருமியைக் கொல்ல.

இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு.

 

உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம்.

 

இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது.

உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே!

 

மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே!

 

பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலை ஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!

 

அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்?

 

பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்?

சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.

 

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?

 

 

நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்என பதில் சொல்லும் ஜென்மம் எது?

 

கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை;

 

இடைப்பட்ட ஏதோவொண்ணு.

 

இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு இருக்கு’, ‘இல்லைஎன்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே.

 

கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால்… சந்தேகமே வேணாம்… கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.

புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.

 

 

 

கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?

 

 

ந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் நூல்அரசியல் புலப்படும்.

ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பார்ப்பனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ஐயோ பாவம் பொழச்சுப் போறான்என கொடுத்தால் எண் சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.

 தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி எய்ம்ஸ்வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.

வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்:

கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!

 

 

ஜூன் 12.

‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம்.

வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில்.

வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை.

காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி.

விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்!

விசாரித்தார்கள்.

“முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள்.

‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

படம் வந்து வாரம் நான்காகி விட்டது.

வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம்.

என்ன ஆச்சு?

 

 

12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா?

‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.

சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறார்களோ….?

அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள்.

ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது?

போஸ்டரில் அவர் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?

வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது.

இந்த அறிவிப்பு மட்டும் போதுமா?

வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா?

இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ – வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ…’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று மற்றவர்கள் எண்ணி குழம்பிவிடக்கூடாது அல்லவா!

ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது.

பம்பாயில் இந்து – முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்…

‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார் மய – தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்…

கிரிமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.

கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம்.

அதாவது இயற்கைச் சீற்றம் ஒரு புராணத்துடன் முடிச்சுப் போடப்படுகிறது.

ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு?

பார்ப்பனிய விஷமத்தனம் காரணம்.

ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப

ஆபத்தானவர்.

தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம்.

ஹேராமின் நாயகன் யார்?

காந்தியைக் கொன்றவன்.

கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் – அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்.

அவன் பெயர் கோட்சே.

அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன்.

அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா?

இருக்கிறது.

ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லை. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக  அந்தப் படைப்பாளி சொல்கிறார் என்பதே கேள்வி.

வேலு நாயக்கர் என்ற ரௌடியாக,

பொம்பளைப் பொறுக்கியாக,

மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை.

மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தில் தன்மையோடு ஒன்றிப் போனார்கள்.

‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும்.

கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும்.

ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார் கமல்.

சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி.

செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறோமா என்று சரிபார்க்க ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்தார் மருமகன் மணிரத்னம்.

புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன்.

நல்ல கலைக்குடும்பம்.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா?

படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே….! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.

‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில்.

‘உலக நாயகனே வா… வா…’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன்.

ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன்.

தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை.

சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம்.

முண்டாசு கட்டாத பாரதி…

உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்…

கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்…

படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ… அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்.

ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை… எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி?

நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும்.

கலைஞானி என்ன…

வெங்காயம்!

 

 

தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்கள் சில சங்கடங்களைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறாரே ப. சிதம்பரம்…

சாட்டை

 

காங்கிரஸ்காரனாக இருந்து கொண்டே அக்கட்சியைக் கல்லறைக்கு அனுப்பும் தனது சதித்திட்டத்தை பச்சையாக எப்படிச் சொல்வார்? அதுதான் தேசநலன்அது, இது என்று சுற்றி வளைத்து பூடகமாகச் சொல்கிறார் ப.சி.

 

காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய முதல் வேலைஎனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். தன் காலத்தில் தமிழ் நாட்டுக்குள் அதைச் சாதிக்கவும் செய்தார்.

 

தொடர்ந்து அகில இந்திய அளவில் ஒழிப்பு வேலை செய்து  அதை பாடையில் தூக்கி வைக்க வேண்டிய வீரமணி, கலைஞர் வகையறாக்கள் அக்கட்சியைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்றார்கள்.

 

 

இந்தக் கொடுமையை காணச் சகியா சிதம்பரம் பெரியார் பணி முடிப்பது ஒரு தமிழன் என்ற முறையில் தன் தோள்மேல் விழுந்த கடமையென கிளம்பியிருக்கிறார்.

 

பெரியார் தொண்டராக இல்லாவிட்டால் என்ன? கதர் சட்டை அணிந்த ஒரு கறுப்புச் சட்டையாக அவரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை.

 

 

சொத்தை அடமானம் வைத்தால்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலைக்கு  நம்மை கொண்டு போனாலும் அவர் நம்மாளுதான்… நாம அவர் பக்கம்தான்.

தேச நலனுக்காக இந்தச் சங்கடத்தை தாங்கிக் கொள்வோம்.